For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டெல்லியை நள்ளிரவில் தாக்கிய புயல்.. 20 மாநிலங்களுக்கு எச்சரிக்கை.. பள்ளிகளுக்கு விடுமுறை

டெல்லியை நள்ளிரவில் தாக்கிய புழுதி புயலால் பல நகரங்களில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    இந்திய வானிலை மையம் வார்னிங்- வீடியோ

    டெல்லி: நள்ளிரவில் தாக்கிய புழுதி புயலால் பல நகரங்களில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இன்றும் புயலுக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளதை தொடர்ந்து பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    வட இந்தியா முழுவதும் கடுமையான கோடை வெயில் வாட்டி வரும் நிலையில், உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் கடந்த வாரம் புழுதி புயல் தாக்கியது. இதைத்தொடர்ந்து இடியுடன் பலத்த மழையும் பெய்தது.

    மணிக்கு பல கி.மீ. வேகத்தில் வீசிய இந்த பயங்கர புயலால் 120க்கும் மேற்பட்டோர் பலியாயினர். பலர் படுகாயமடைந்தனர்.

    நள்ளிரவில் தாக்கிய புயல்

    நள்ளிரவில் தாக்கிய புயல்

    இந்த நிலையில் டெல்லி, சண்டிகர், அரியானா, மாநிலங்களில் நேற்று இடி, மின்னலுடன் கூடிய பலத்த புயல் தாக்கியது. தலைநகர் டெல்லி, சண்டிகரை நள்ளிரவு புயல் தாக்கியது.

    இயல்பு வாழ்க்கை முடக்கம்

    இயல்பு வாழ்க்கை முடக்கம்

    டெல்லியின் பல பகுதிகளில் இடி, மின்னலுடன் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. பல இடங்களில் மின்சாரம் தடைப்பட்டதால் டெல்லி மாநகரம் இருளில் மூழ்கியது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    மின்சாரம் துண்டிப்பு

    மின்சாரம் துண்டிப்பு

    ராஜஸ்தான் மாநிலத்திலும் கன மழை பெய்து வருகிறது. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்களி இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    பள்ளிகளுக்கு விடுமுறை

    பள்ளிகளுக்கு விடுமுறை

    இந்நிலையில் இன்றும் டெல்லி உட்பட 20 மாநிலங்களில் புயல் தாக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, டெல்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    மெட்ரோ ரயில் எச்சரிக்கை

    மெட்ரோ ரயில் எச்சரிக்கை

    மணிக்கு 90 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மிகுந்த எச்சரிக்கையுடன் ரயில் இயக்கப்படும் என்று டெல்லி மெட்ரோ நிர்வாகம் தெரிவித்து உள்ளது. 90 கி.மீட்டர் வேகத்திற்கு மேல் காற்று வீசினால், மெட்ரோ ரயில் பிளாட்பார்மில் நிறுத்திவைக்கப்படும் என்று டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

    தமிழகத்தில் மழை

    தமிழகத்தில் மழை

    20 மாநிலங்களில் மோசமான வானிலை நிலவக்கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    English summary
    Sand storm hits Delhi at night. Routine life affected due to the storm. Indian Meteorological center giving cyclone warning for 20 states.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X