For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தெலுங்கானா தூதர் சானியா மிர்சா.. அரசியல் கட்சிகள் நிலை!

By Mathi
Google Oneindia Tamil News

ஹைதராபாத்: தெலுங்கானாவின் தூதராக டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா நியமிக்கப்பட்டதற்கு அம்மாநில பாஜக தலைவரைத் தவிர பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

தெலுங்கானா மாநிலத்தின் தூதராக சானியா மிர்சா நியமிக்கப்பட்டார். ஆனால் பாகிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை சானியா மிர்சா திருமணம் செய்து கொண்டதால் அவர் 'பாகிஸ்தான் மருமகள்".. அவரை எப்படி தெலுங்கானாவின் தூதராக நியமிக்கலாம் என்று அம்மாநில பாரதிய ஜனதா தலைவர் கே. லக்ஸ்மன் கேள்வி எழுப்பினார்.

இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இருப்பினும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் தெலுங்கானா பாஜக தலைவரின் கருத்தை நிராகரித்தே வருகின்றனர்.

'Sania Mirza is a Symbol of Pride for India': Reactions on Row Over BJP Leader's Controversial Remark

சானியா மிர்சா விவகாரத்தில் தலைவர்களின் கருத்துகள்:

  • சானியா விவகாரத்தில் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை; பாகிஸ்தானின் மருமகள் என்று சிலர் விமர்சித்திருந்தால் அது அவர்களின் கலாசாரம் என்பதையே வெளிப்படுத்துகிறது- பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி
  • தெலுங்கானா பாரதிய ஜனதாவின் நிலைப்பாடு மிகச் சரியானது- பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி
  • தெலுங்கானா போராட்டத்துக்காக எதுவும் செய்யாத சானியா மிர்சாவை தூதராக நியமிப்பதை நாங்கள் எதிர்க்கிறோம். அவர் பாகிஸ்தானை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டவர். வேறு ஒருவரை தூதராக நியமிக்க வேண்டும் - தெலுங்கானா காங்கிரஸ் தலைவரான ஹனுமந்தராவ்
  • சானியா மிர்சாவை தூதராக நியமித்ததில் எந்த ஒரு தவறுமே இல்லை. அப்படியானால் வெளிநாட்டு பயிற்சியாளர்கள் அனைவரையும் பாஜக எதிர்க்கிறதா? அவர்களின் குறுகிய மனப்பான்மையைத்தான் இது வெளிப்படுத்துகிறது- சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் நரேஷ் அகர்வால்
  • பாஜகவினரின் இத்தகைய கருத்துகள் வன்மையாக கண்டிக்கத்தக்கது. சானியாவை தூதராக நியமித்தது சரியான நடவடிக்கை - காங்கிரஸ் கட்சியின் ரஷீத் ஆல்வி

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>Sania Mirza is a daughter of India. She has brought innumerable laurels to the country in the game of Tennis. She is a brand ambassador!</p>— Kiran Bedi (@thekiranbedi) <a href="https://twitter.com/thekiranbedi/statuses/492186743055994880">July 24, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

  • சானியா மிர்சா இந்தியாவின் புதல்வி... இந்த நாட்டுக்கு புகழை தேடித் தந்தவர்.. அவர் நமது தூதுவரே- கிரண்பேடி
  • தெலுங்கானா அரசின் நடவடிக்கையை நாம் நிச்சயம் பாராட்ட வேண்டும்.. அவரை தூதராக நியமித்தது சரியான நடவடிக்கை- பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி
English summary
Telangana BJP leader K Laxman on Wednesday flayed the state government's decision to appoint tennis star Sania Mirza as the brand ambassador of the newly carved-out state, terming her as "daughter-in-law" of Pakistan and questioning her credentials for the honour. Here are some of the political reactions on the controversy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X