For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கேல் ரத்னா விருதுக்கு சானியா மிர்சா, அர்ஜுனா விருதுக்கு ரோஹித் ஷர்மா பெயர் பரிந்துரை

Google Oneindia Tamil News

டெல்லி : இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சாவின் பெயர் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

பெண்கள் இரட்டையர் பிரிவில் தரவரிசையில் தற்போது முதலிடம் வகிக்கும் சானியா மிர்சா, விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் முதல் முறையாக இரட்டையர் பிரிவில் மார்டினா ஹிங்கிஸுடன் இணைந்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். 28 வயதான சானியா மிர்சா மூன்று கலப்பு இரட்டையர் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.

sania mirza

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு, விளையாட்டுத்துறை அமைச்சகத்தால் அமைக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி வி.கே. பாலி தலைமையிலான குழு சானியா மிர்சாவின் பெயரை பரிந்துரைத்துள்ளது.

இந்த பரிந்துரை விளையாட்டு துறை அமைச்சகத்துக்கு அனுப்பபட்டு, பின்னர் விளையாட்டுத்துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் கையெழுத்திட்ட பிறகு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

இதைதொடர்ந்து இந்த விருது வரும் 29 ஆம் தேதி தேசிய விளையாட்டு தினத்தன்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியால் வழங்கப்படும். விளையாட்டுத்துறையில் வழங்கப்படும் உயரிய விருது கேல் ரத்னா விருதுதான். கேல் ரத்னா விருது பெறுபவர்களுக்கு சான்றிதழுடன் ரூ 7.5 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்படும்.

லியாண்டர் பயசுக்கு பிறகு மதிப்புமிக்க இந்த விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாதான் என்பது குறிப்பிடத்தக்கது.

சானியா தவிர இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மா, துப்பாக்கி சுடுதல் வீரர் ஜித்து ராய் உள்ளிட்ட 17 பேர் அர்ஜுனா விருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

English summary
Sania Mirza on Tuesday became only the second tennis player to be recommended for the prestigious Rajiv Gandhi Khel Ratna, while star cricketer Rohit Sharma and ace shooter Jitu Rai were among the 17 sportspersons picked for this year's Arjuna awards.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X