For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டொக், டொக்: மமதா பானர்ஜிக்கு டென்னிஸ் கற்றுக் கொடுத்த சானியா மிர்சா

By Siva
Google Oneindia Tamil News

கொல்கத்தா: கொல்கத்தாவில் நடந்த மாதிரி போட்டியின்போது டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிக்கு டென்னிஸ் விளையாட கற்றுக் கொடுத்தார்.

விளையாட்டு துறையைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகளை கௌரவிக்கத் தவறாதவர் மேற்கு வங்க மாநில முதல்வர் மமதா பானர்ஜி. இந்நிலையில் புதன்கிழமை கொல்கத்தாவில் உள்ள நேதாஜி உள்ளரங்கில் பிரபலங்கள் கலந்து கொண்ட மாதிரி டென்னிஸ் போட்டி நடந்தது.

அந்த நிகழ்ச்சியில் இரட்டையர் பிரிவில் உலகின் நம்பர் 1 வீராங்கனையான சானியா மிர்சா, மார்டினா நவரத்திலோவா, வீரர்கள் லியான்டர் பயஸ், மகேஷ் பூபதி ஆகியோர் கலந்து கொண்டு விளையாடினர். ஒரு பக்கத்தில் பூபதியும், சானியாவும் மறுபக்கத்தில் பயஸும், நவரத்திலோவாவும் சேர்ந்து விளையாடினர்.

நிகழ்ச்சியின்போது சானியா மமதாவுக்கு டென்னிஸ் ஆட கற்றுக் கொடுத்தார்.

இது குறித்து சானியா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

மமதா பானர்ஜி மேடமுடன் சேர்ந்து சில டென்னிஸ் பந்துகளை அடித்ததில் கௌரவம். இந்த நிகழ்ச்சிக்கு வந்ததற்கு நன்றி மமதா மேடம் என்று தெரிவித்துள்ளார்.

English summary
Tennis star Sania Mirza taught West Bengal CM Mamata Banerjee how to play tennis at an exhibition match held in Kolkata.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X