For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அய்யோ பாவம்.. திரிஷாவைப் போலவே தெருவோர நாய்களுக்காக பரிதாபம் காட்டும் சானியா மிர்ஸா

Google Oneindia Tamil News

மும்பை: தெருக்களில் அனாதையாக திகழும் நாய்கள் மற்றும் பூனைகளை தத்தெடுத்து வளர்க்க மக்கள் முன்வர வேண்டும் என்று டென்னிஸ் இளம் புயல் சானியா மிர்ஸா கோரிக்கை விடுத்துள்ளார்.

பேட்டா எனப்படும் People for the Ethical Treatment of Animals (PETA) அமைப்பின் பிராண்ட் அம்பாசடராக இருக்கும் சானியா, ஒரு பத்திரிகை விளம்பரப் படத்திலும் இதுதொடர்பாக நடித்துள்ளார்.

சர்வதேச மகளிர் இரட்டையர் டென்னிஸ் தரப் பிரிவில் முதலிடத்தைப் பிடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையபைப் பெற்றவர் சானியா. அவரும் மார்ட்டினா ஹிங்கிஸும் இணைந்து கடந்த ஏப்ரல் மாதம் இந்த சாதனையைப் படைத்தனர்.

பேட்டா விளம்பரம்...

பேட்டா விளம்பரம்...

இந்த நிலையில் பேட்டாவுக்காக குரல் கொடுக்கு வந்துள்ளார் சானியா. பேட்டாவின் புதிய விளம்பரப் படத்தில் நடித்துள்ள சானியா, அனாதரவாக தெருக்கலில் திரியும் நாய்கள், பூனைகளை தத்தெடுக்க மக்கள் முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

போஸ்...

போஸ்...

மேலும் அந்த விளம்பரத்தில் தான் தெருவோரத்திலிருந்து மீட்ட பூனை ஒன்றுடன் போஸும் கொடுத்துள்ளார் சானியா. இந்த விளம்பரப் படத்தின் புகைப்படக்காரராக ஒய்எஸ்என் மூர்த்தி செயல்பட்டுள்ளார்.

மேக்கப்...

மேக்கப்...

சானியாவுக்கான மேக்கப் மற்றும் ஹேர்ஸ்டைலை தமன்னா ரூஸ் பார்த்துக் கொண்டுள்ளார். டிரஸ் மேக்கர் ஈஷா அமீன் ஆவார்.

நமது கடமை

நமது கடமை

இதுகுறித்து சானியா கூறுகையில், நாய்கள், பூனைகள்தான் பெருமளவில் சாலைகளிலும், தெருக்களிலும் அனாதையாக திரிகின்றன. இவற்றை மீட்டு உரிய புகலிடம் தர வேண்டியது மனிதர்களாகிய நமது கடமையாகும். நம்மைப் போலவே அவைகளும் பாதுகப்பாக வளர வேண்டியது கடமையாகும் என்றார்.

இரக்கம் காட்டுங்கள்...

இரக்கம் காட்டுங்கள்...

விலங்குகளிடத்தில் இரக்கம் காட்டுங்கள். மனிதர்களிடம் மட்டுமல்ல, விலங்குகளிடமும் நாம் இரக்கம் காட்ட வேண்டியது அவசியமாகும். அதுதான் கருணைத்துவத்தின் அடிப்படையாகும் என்றார் சானியா.

மனிதாபிமான செயல்...

மனிதாபிமான செயல்...

வீடில்லாமல் திரியும் நாய்களுக்கும், பூனைகளுக்கும் வீடு தருவது என்பது அவற்றிற்கு கெளரவம் சேர்க்கும் செயலாகும் என்று கூறும் சானியா, விலங்குகளை மனித நேயத்துடன் பராமரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மகளிர் நல்லெண்ணத் தூதர்...

மகளிர் நல்லெண்ணத் தூதர்...

பத்ம ஸ்ரீ, அர்ஜூனா விருதுகளைப் பெற்றுள்ள சானியா மிர்ஸா, கடந்த ஆண்டு தெற்காசியாவுக்கான ஐநா மகளிர் நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரிஷா...

திரிஷா...

நடிகைகள் பலரும் விலங்குகளுக்காக குரல் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக திரிஷா தெரு நாய்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் ஆவார். பல நாய்களை அவர் தத்தெடுத்துள்ளார். தற்போது சானியாவும் அதில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
India's tennis star Sania Mirza has lent her support to the cause of animal welfare, calling for adoption of homeless dogs and cats in a new ad campaign for People for the Ethical Treatment of Animals (PETA).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X