For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விமர்சிப்பவர்களை விரட்டி விரட்டி கைது செய்யும் பாஜக.. சஞ்சய் பட் மீது பாய்ந்த கஞ்சா கேஸ்!

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

காந்திநகர்: குஜராத்தின் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டை போதை பொருள் வழக்கில் சிபிசிஐடி போலீஸார் திடீரென கைது செய்தனர்.

குஜராத்தைச் சேர்ந்த காவல் துறை அதிகாரியாக இருந்தவர் சஞ்சய் பட். இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பாஜக அரசுக்கு எதிரான விமர்சனங்களை முன் வைத்து வந்தார். இந்நிலையில் அவர் போதை பொருள் வழக்கில் சிபிசிஐடி பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

சஞ்சீவ் பட் கடந்த 1996-ம் ஆண்டில் குஜராத்தின் பனாஸ்காந்தா காவல் நிலையத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்தார். அப்போது ராஜஸ்தானைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜ் புரோகித், என்பவர் மீது 1.5 கிலோ போதைப் பொருளை வைத்திருந்ததாக குற்றம்சாட்டிய பனாஸ்காந்தா காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

விசாரணை

விசாரணை

ஆனால் ராஜ்புரோகித் ராஜஸ்தானில் உள்ள அவரின் வீட்டில் இருந்து கடத்தப்பட்டதும், போதைப் பொருள் பொட்டலத்தை பனாஸ்காந்தா காவல்துறையே அவர் அடைத்து வைத்திருந்த ஹோட்டலில் வைத்ததாகவும் தகவல் வெளியானது. வழக்கறிஞரை சிக்க வைக்க சஞ்சீவ் பட் உள்ளிட்ட காவல்துறையினர் இவ்வாறு செயல்பட்டதாக அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த குஜராத் உயர் நீதிமன்றம் இதுதொடர்பாக விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவிட்டது.

கைது

கைது

பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கு, கடந்த ஜனவரியில் குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து புத்துயிர் பெற்றது. இந்த வழக்கில் தற்போது நடவடிக்கை எடுத்துள்ள சிபிசிஐடி போலீசார், சஞ்சீவ் பட் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாஜக அரசு மீது விமர்சனம்

பாஜக அரசை விமர்சிப்பவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதில் சஞ்சய் பட்டும் தப்பவில்லை. இது பழிவாங்கும் நடவடிக்கை என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர். சஞ்சய் பட் நேற்று போட்ட டுவீட்டில் இன்று ஆசிரியர் தினம். டெல்லி பல்கலைக்கழகமோ அல்லது குஜராத் பல்கலைக்கழக ஆசிரியரோ நரேந்திர மோடியை அடையாளம் கண்டு கொள்வர் என நம்புவோமாக என தனது டுவிட்டரில் அவர் படிக்காததை மேற்கோள்காட்டியுள்ளார். முன்னதாக, குஜராத் கலவர வழக்கு தொடர்பாக பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வந்த சஞ்சீவ் பட் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.

மடத்தனமான மோடி அரசு

ரூபாய் நோட்டின் மதிப்பு குறைந்துவிட்டது, பெட்ரோலிய பொருட்கள் அதிகரித்துள்ளது. பாஜகவினர் கண்ணில்லாதவர்களாகிவிட்டனர். மடத்தனமான மோடி அரசு என்றும் அவர் பதிவிட்டுள்ளார். அதுபோல் அவர் கடந்த 2014, 2018 ஆகிய ஆண்டுகளில் விற்ற பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் ஆகியவற்றின் விலையை ஒப்பிட்ட பட், 2022-ஆம் ஆண்டு இவற்றின் விலை எவ்வாறு இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். இதுபோல் ஏராளமான சம்பவங்களில் பாஜக அரசை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

English summary
Former IPS officer Sanjiv Bhatt was arrested Wednesday by the Gujarat CID in connection with a 22-year-old case of alleged planting of drugs to arrest a man.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X