For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமித்ஷா நினைத்தால் கர்நாடகா- மகாராஷ்டிரா எல்லை பிரச்சனையை உடனே தீர்க்க முடியும்: சஞ்சய் ராவத்

Google Oneindia Tamil News

பெல்காம்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நினைத்தால் கர்நாடகா- மகாராஷ்டிரா எல்லை பிரச்சனையை தீர்க்க முடியும் என்று சிவசேனா ராஜ்யசபா எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் மராத்தி மொழி பேசும் மக்கள் வாழும் கிராமங்களை மகாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை. இது தொடர்பாக ஆய்வு செய்ய மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, குழு ஒன்றையும் அமைத்துள்ளார்.

Sanjay Raut on Maharashtra-Karnataka border issue

இந்நிலையில் கர்நாடகாவின் பெல்காமில் இன்று சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், மராத்தி மொழி பேசும் மக்களின் அமைப்புடன் ஆலோசனை நடத்தினார். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் சஞ்சய் ராவத் கூறியதாவது:

இப்பகுதியில் பல லட்சம் மராத்தி மொழி பேசும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் தங்களது மொழி, கலாசாரம், பண்பாட்டை பின்பற்றி வருகின்றனர்.

எல்லை பிரச்சனைகளுக்கு அப்பால் இம்மக்களை மொழி பிரச்சனையில் இணைத்துவிட கூடாது. இது தொடர்பாக மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் பேச இருக்கிறேன்.

அரசுக் கார், பயணப்படி வேண்டாம்.. அதிமுக ஒன்றிய கவுன்சிலரின் ஷாக் அன்ட் சபாஷ் மனு.. நாகையில் பரபரப்புஅரசுக் கார், பயணப்படி வேண்டாம்.. அதிமுக ஒன்றிய கவுன்சிலரின் ஷாக் அன்ட் சபாஷ் மனு.. நாகையில் பரபரப்பு

கர்நாடகா, மகாராஷ்டிரா மாநில முதல்வர்கள் இணைந்து இப்பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும். உள்துறை அமைச்சர் அமித்ஷா நினைத்தால் காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும்; 370-வது பிரிவை நீக்க முடியும்.

அப்படியானால் அமித்ஷா நினைத்தால் கர்நாடகா- மகாராஷ்டிரா எல்லை பிரச்சனையையும் தீர்க்க முடியும். இந்த விவகாரத்தில் அமித்ஷா கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு சஞ்சய் ராவத் கூறினார்.

English summary
Shiv Sena Senior leader and Rajya Sabha MP Sanjay Raut has said that Belgaum border dispute between Karnataka and Maharashtra can be resolved if Union home minister Amit Shah wants.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X