For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவில் அமைகிறது உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்.. எந்த நகரில் தெரியுமா?

அகமதாபாத்தில் உள்ள சர்தார் பட்டேல் கிரிக்கெட் ஸ்டேடியம் உலகின் பெரிய ஸ்டேடியமாக உருவாக்கப்படவுள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் இங்க சர்வதேச போட்டிகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

அகமதாபாத்: அகமதாபாத்தில் உள்ள சர்தார் பட்டேல் ஸ்டேடியம் உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமாக உருவாக்கப்படவுள்ளது. இந்த ஸ்டேடியம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் உருவாக்கப்படவுள்ளது.

இந்தியாவில் சர்வதேச போட்டிகள் நடைபெறும் மைதானங்களில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் பட்டேல் ஸ்டேடியம் ஒன்று. இங்கு இதுவரை ஏராளமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றுள்ளன.

Sardar patel cricet stadium is to be the largest stadium in this world!

சுமார் 54000 பேர் வரை அமரும் இந்த மைதானத்தை உலகின் மிகப்பெரிய மைதானமாக உருவாக்க குஜராத் மாநில கிரிக்கெட் கழகம் முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகளை விரைவில் தொடங்க உள்ள அம்மாநில கிரிக்கெட் கழகம் புதிதாக கட்டப்படும் மைதானத்தில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் அமரலாம் என தெரிவித்துள்ளது.

மைதானத்துக்கு ஏற்ற வகையில் பார்க்கிங் வசதி, குளிர்சாதனப் பெட்டிகள் உள்ளிட்ட வசதிகளும் விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் இங்கு சர்வதேச போட்டிகள் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தற்போது உலகிலேயே ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் ஸ்டேயம் தான் உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமாக கருதப்படுகிறது. இங்கு ஒரு லட்சத்து 24 பேர் அமர்ந்து போட்டியை ரசிக்கலாம். இந்த மைதானத்தை பின்னுக்கு தள்ளும் வகையில் அகமதாபாத்தில் புதிய ஸ்டேடியம் அமைக்கப்படவுள்ளது.

English summary
The Gujarat cricket club tells that the sardar patel cricket stadium in Ahamadabad is going to be the largest stadium in this world. And also the cricet club authorities says that in this stadium at a time one lakh 10 thousand people can sit and watch the match. After two years the international matches can be played here.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X