For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ. மரணத்தை வைத்து தண்டனையில் இருந்து தப்ப நினைத்த சசிகலாவுக்கு சம்மட்டி அடி கொடுத்த சுப்ரீம்கோர்ட்

ஜெ. மரணத்தை வைத்து சிறை தண்டனையில் இருந்து தப்ப நினைத்த சசிகலாவுக்கு சம்மட்டி அடி தந்துள்ளது உச்சநீதிமன்றம்.

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: ஜெயலலிதா மரணத்தை காரணம்காட்டி 4 ஆண்டு சிறை தண்டனையில் இருந்து தப்ப நினைத்த சசிகலாவின் சீராய்வு மனுவை டிஸ்மிஸ் செய்து உச்சநீதிமன்றம் சம்மட்டி அடி கொடுத்திருக்கிறது.

சொத்து குவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹா கொடுத்த 4 ஆண்டு சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்தது. இதனால் பெங்களூரு சிறையில் தண்டனையை அனுபவித்து வருகிறார் சசிகலா.

சீராய்வு மனு

சீராய்வு மனு

ஆனல் சிறைக்குள்ளேயே பணத்தை கொடுத்து அதிகாரிகளை வளைத்துப் போட்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார் சசிகலா என்பதை வீடியோ காட்சிகள் அம்பலப்படுத்தி கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் ஜெயலலிதாவே இறந்துவிட்ட காரணத்தால் வழக்கே நிற்காது என்கிற அடிப்படையில் உச்சநீதிமன்றத்தில் ஒரு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தார் சசிகலா.

நம்பிக்கையுடன் சசிகலா

நம்பிக்கையுடன் சசிகலா

இந்த சீராய்வு மனு மீது நல்ல முடிவு வரும்... நிச்சயம் வெளியே வந்துவிடுவோம் என பெரும் நம்பிக்கையோடு சசிகலா காத்திருந்தார். அப்படி வெளியே வந்தால் அடைய முடியாமல் போன முதல்வர் நாற்காலியில் அமரத்தான் சசிகலா முயற்சிப்பார் என்பதும் நாடறிந்த உண்மை.

டிஸ்மிஸ்

டிஸ்மிஸ்

அதுவும் தற்போது சசிகலா குடும்பத்துக்கு எதிராக அதிமுகவினர் திரண்டு நிற்கும் நிலையில் சீராய்வு மனு மீதான தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. தற்போது சசிகலாவின் சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ் செய்துவிட்டது.

இனி சான்ஸ் இல்லை

இனி சான்ஸ் இல்லை

இனி சசிகலாவுக்கு சட்ட ரீதியாக எந்த ஒரு வாய்ப்புமே இல்லை என்கின்றனர் சட்ட வல்லுநர்கள். சட்டத்தையும் அதிகாரிகளையும் வளைத்துப் போடுவதெல்லாம் எங்களுக்கு எளிது என கெத்து காட்டிய சசிகலா தரப்புக்கு உச்சநீதிமன்றத்தின் இந்த அதிரடி தீர்ப்பு சம்மட்டி அடி என்பதில் சந்தேகமே இல்லை.

English summary
Sasikala Natarajan will stay in jail. The Supreme Court has rejected her review petition against the order of conviction in the disproportionate assets case. She had move the SC after it had convicted her and ordered her to serve a four year sentence.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X