For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சசிகலா வெளிவரமுடியாதபடி ஸ்டிராங் காரணம்... சுட்டிக் காட்டும் வழக்கறிஞர்கள்!

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து சசிகலா வெளிவர முடியாத படி வலுவான காரணம் உள்ளதாக வழக்கறிஞர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

டெல்லி : சசிகலா அரசு ஊழியர் இல்லையெனிலும் அரசு இயந்திரத்தை பயன்படுத்தி சொத்துகளை குவித்ததால் அவர் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து வெளிவர முடியாது என்று மூத்த வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, உச்ச நீதிமன்றத்தால் தண்டனை உறுதி செய்யப்பட்ட சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.

Sasikala's review plea: she cannot be acquitted

இரண்டரை மாதங்கள் ஆன நிலையில் தற்போது மூவரும் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளனர். அதில் சசிகலா குறிப்பிடுகையில், ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் தண்டனை பெற தான் அரசு ஊழியர் அல்ல என்பதால் இந்த வழக்கில் தன்னை தண்டிக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் அரசு ஊழியர்கள் இல்லையென்றாலும்கூட ஜெயலலிதா என்ற அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்தி மூவரும் சொத்து சேர்த்ததற்காக அவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர். ஜெயலலிதாவுக்கு இவர்கள் பினாமி என்பது போய் தற்போது இவர்களுக்கு ஜெயலலிதா பினாமியாக இருந்துள்ளார் என்பதுதான் நிதர்சனம்.

ஜெயலலிதாவை வைத்து ஏராளமான சொத்துகளை கொள்ளையடித்த சசிகலா அன்ட் கோ தற்போது ஜெயலலிதாவுக்கு மேலும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவரை கோத்துவிடுகின்றனர் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர். மேலும் அவர்கள் மூவரும் இந்த காரணத்தை வைத்து தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது என்று மூத்த வழக்கறிஞர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

ஜெயலலிதாவின் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து மன்னார்குடி கும்பல் சொத்துகளை வாங்கி குவித்துவிட்டு தற்போது தான் அரசு ஊழியர் இல்லை என்று கூறுகிறீர்களே. என்னம்மா இப்படி பண்றீங்களேமா....

English summary
Sasikala and other 2 were misused Jayalalitha's CM post and had lot of assets. So they cannot be acquitted from conviction.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X