For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வடகிழக்கு மாநிலங்களில் தீவிரமாக பரவிவரும் "சாத்தான்" வழிபாடு

By Veera Kumar
Google Oneindia Tamil News

ஷில்லாங்: இந்திய வடகிழக்கு மாநிலங்களில் பேய் வழிபாடு மிகவும் வேகமாக பரவிவருகிறது. அம்மாநிலங்களிலுள்ள கிறிஸ்தவர்கள் பலரும் பேய் வழிபாட்டுக்கு மாறி வருகிறார்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அட நன்னாரிகளா..

அட நன்னாரிகளா..

அசாம், நாகாலாந்து, மேகாலயா உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில் தற்போது பேய்தான் கண்கண்ட தெய்வமாக மாறிவருகிறது. அப்பகுதியில் இதற்காக குரூப்புகளை ஆரம்பித்து விழுந்து விழுந்து பேய்களை வழிபட்டு வருகிறார்கள்.

பயத்தை எழுப்புங்கள்

பயத்தை எழுப்புங்கள்

திமாபூர் பகுதியிலுள்ள சர்ச் பாதிரியார் ஒருவரே பேய் வழிபாட்டை தூண்டுவதற்காக 'பயத்தை எழுப்புங்கள்' என்ற பெயரில் அமைப்பு துவங்கியுள்ளார். இதற்காக ரூ.20 செலுத்தி, விண்ணப்பம் நிரப்பிக்கொடுத்து, உறுப்பினர்களாக சேருகிறார்கள் இளைஞர்கள்.

இந்த அமைப்பில் உள்ள ஒருவர் தாக்கப்பட்டால் பிறர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து அவர்களை அடித்து நொறுக்க வேண்டும் என்பது அதிலுள்ள நிபந்தனைகளில் ஒன்றாகும்.

நள்ளிரவில் ஆலோசனை

நள்ளிரவில் ஆலோசனை

பெயர் தெரிவிக்க விரும்பாத பாதிரியார் ஒருவர் கூறுகையில், பயத்தை எழுப்புங்கள் குரூப்பை சேர்ந்தவர்கள், வாரம் ஒரு நாள் நள்ளிரவில் திமபூர் நகரின் வெளியே ஒன்று கூடுவார்கள் என்றார். ஆனால் இவர்கள் பொதுமக்கள் கண்களுக்கு படாமல் தங்கள் ஆலோசனை கூட்டங்களை நடத்துகிறார்கள்.

சர்ச்சுகளில் சிறப்பு பிரார்த்தனை

சர்ச்சுகளில் சிறப்பு பிரார்த்தனை

கோஹிமா நகரில் கடந்தாண்டு ஏப்ரல் மாதம், பேய் வழிபாட்டாளர்கள் ஒன்று சேர்ந்து 'சிலுவைப்போருக்கான மாற்றம்' என்ற பெயரில் பெரும் மாநாடு நடத்தி ஆச்சரியப்படுத்திநர். இவர்களின் எழுச்சியாலும், கிறிஸ்தவர்கள் பலரும் இதுபோன்ற சாத்தான் வழிபாட்டுக்கு செல்வதாலும், நாகாலாந்து மாநிலத்தின் பல தேவாலயங்களில் சாத்தான் வழிபாட்டாளர்கள் மனம் திரும்ப வேண்டி சிறப்பு பிரார்த்தனைகள் நடக்கின்றன.

நோயை குணப்படுத்தும் பேய்!

நோயை குணப்படுத்தும் பேய்!

சாத்தான் வழிபாட்டின் மூலமாக நோயை குணப்படுத்துவதாக கூறி பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரிடம் ரூ.3ஆயிரம் கேட்ட நபரை போலீசார் கைது செய்தனர். தனது வழிபாட்டின் போது இயேசு நாதர் பெயரை குறிப்பிடாமல் அவர் வழிபாடு நடத்தியதால் சந்தேகமடைந்த சிறுமியின் பெற்றோர் போலீசில் இதுகுறித்து புகார் அளித்தனர். அதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

திடீர் திடீருன்னு உருளுதாம்..

திடீர் திடீருன்னு உருளுதாம்..

கைது செய்யப்பட்ட லால்ரின்மாவியா போலீசில் அளித்த வாக்கு மூலத்தில், " நான் கிறிஸ்தவ போதகராகத்தான் இருந்தேன். சாத்தான் வழிபாட்டாளர் ஒருவர் என்னை அந்த வழிபாட்டுக்கு மாறுமாறு தொடர்ந்து வலியுறுத்தினார். ஆனால் நான் மறுத்த நிலையில், எனது கண்ணுக்கு மட்டுமே அவர் தெரியும்படியாக காட்சியளித்து ஆச்சரியப்படுத்தினார். இதையடுத்து நானும் சாத்தான் வழிபாடு சிறந்தது என நம்பி அதை வைத்து நோய் தீர்க்க தொடங்கினேன்" என்று கூறியுள்ளார்.

இருட்டின் இளவரசருக்கு சக்தி அதிகம்

இருட்டின் இளவரசருக்கு சக்தி அதிகம்

சாத்தான் வழிபாட்டிலும் பல வகை உள்ளது. அதில் லால்ரின்மாவியா வழிபடும் சாத்தானுக்கு சக்தி அதிகமாம். மிசோராம் இளைஞர்கள் வணங்கும் சாத்தானுக்கு இதைவிட சக்தி சற்று குறைவுதானாம். லால்ரிமாவியாவின் சாத்தானை வழிபடுவோர் தங்களுக்கு ஒரு அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர். அதன் பெயர் இருட்டின் இளவரசன். மாதத்தின் முதல் புதன்கிழமை இருட்டின் இளவரசன் குரூப்பிலுள்ள ஆண்களும், பெண்களும் ஒன்று கூடி தீவிர பிரேயர் நடத்துகிறார்கள்.

English summary
It was in Mizoram and then in Nagaland and now in Meghalaya, Satanic Worship on the rise in North East region. A prominent church leader in Nagaland had commented last year on the purported rising number of Satan worshippers in the state, the alleged distribution of membership forms in the state has even fueled unnerved for many Christians in the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X