For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சவூதியில் அமெரிக்க தூதரகத்தைத் தாக்கும் ஐஎஸ் திட்டம் முறியடிப்பு.. 93 பேர் கைது!

Google Oneindia Tamil News

டெல்லி: சவூதி அரேபியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தையும், சில அமெரிக்க நிறுவனங்களையும் தாக்க ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதை கண்டுபிடித்துள்ளனர் சவூதி போலீஸார்.

இதுதொடர்பாக கடந்த மாதம் 93 பேரை சவூதி போலீஸார் கைது செய்துள்ளனர். சிரியாவில் வைத்துத இந்த சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதற்காக சவூதியில் பிறந்து ஐஎஸ் அமைப்பில் போராளிகளாக செயல்பட்டு வந்தவர்களை தேர்வு செய்து ரியாத்துக்கு அனுப்பி வைத்திருந்தது ஐஎஸ் அமைப்பு.

Saudi busts a horrific ISIS plot

இந்தத் திட்டத்தின்படி அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் தூதரகத்தைக் குறி வைத்துத் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்தனர். மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இந்த தாக்குதல்களை நடத்தவும் தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் மார்ச் முதல் வாரத்தில் இந்த சதி குறித்த தகவல் சவூதி போலீஸாருக்கு தெரிந்து விட்டது. இதையடுத்து சதித் திட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய ஆரம்பித்தது சவூதி போலீஸ்.

மேலும் அமெரிக்க தூதரகம் மற்றும் நிறுவனங்களின் பாதுகாப்பும் பல மடங்கு அதிகரிக்கப்பட்டது. இதுவரை இந்த விவகாரம் தொடர்பாக சவூதியைச் சேர்ந்த 93 பேர் கைது செய்யப்பட்டுள்ளனராம். அனைவரும் ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

அமெரிக்கர்களைக் குறி வைத்து ஐஎஸ் அமைப்பு உலகளாவிய தாக்குதலுக்கு திட்டமிட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே சவூதியில் வைத்து அமெரிக்காவைத் தாக்க திட்டமிட்டு தற்போது அது தோல்வியில் முடிந்துள்ளது.

The ISIS which has been looking to hit the United States of America hatched a plot to hit them at Saudi Arabia. The target was the American embassy in Saudi Arabia and few other American related installations, investigations have revealed.

English summary
The ISIS which has been looking to hit the United States of America hatched a plot to hit them at Saudi Arabia. The target was the American embassy in Saudi Arabia and few other American related installations, investigations have revealed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X