For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேவயானி கோபர்கடேவுக்கு ஒரு நியாயம், சவுதி அதிகாரிக்கு ஒரு நியாயமா?

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: பணிப்பெண்ணை கொடுமை செய்ததற்காக அமெரிக்காவுக்கான இந்திய தூதரக பெண் அதிகாரி தேவயானி கோபர்கடேவை அந்த நாட்டு போலீசார் கையில் விலங்கு மாட்டி அழைத்துச் சென்றனர். ஆனால், இந்தியாவிலோ சவுதி அதிகாரி பலாத்கார வழக்கில் சிக்கியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று சமூக வலைத்தளங்களில் மக்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

அந்த அதிகாரி சவுதிக்கே தப்பி சென்றுவிட்டதாக வெளியான தகவலும் அவர்களை கோபப்படுத்தியுள்ளது.

சவுதி அதிகாரி

சவுதி அதிகாரி

சவுதி அரேபியாவின் தூதரகம் இந்திய தலைநகர் டெல்லியிலுள்ளது. இதில் பணியிலுள்ளார் செயலாளர் என்ற மட்டத்திலான ஒரு 'உயர் அதிகாரி'. இந்த அதிகாரியின் வீடு குர்கான் பகுதியிலுள்ளது. இந்த வீட்டில் வேலை செய்வதற்காக என்று, 4 மாதங்கள் முன்பு நேபாளத்தை சேர்ந்த 44 வயது பெண் மற்றும் அவரது 20 வயது மகள் பணியமர்த்தப்பட்டனர்.

பணிப்பெண்கள்

பணிப்பெண்கள்

ஆனால், பணிக்கு அமர்த்திய சில நாட்களிலேயே வேலைக்கு வந்த தாயையும், மகளையும், அந்த அதிகாரி செக்ஸ் அடிமைகளாக நடத்தியுள்ளார். சவுதியில் இருந்து டெல்லி வரும் அவரது நண்பர்கள் பலருக்கும் அந்த இரு பெண்களையும் விருந்தாக்கியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில்

சமூக வலைத்தளங்களில்

மீட்கப்பட்ட அந்த பெண்கள் தங்கள் குமுறலை புகாராக கொடுத்தும் அதிகாரி மீது இன்னும் கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதுகுறித்து சமூக வலைத்தளமான டிவிட்டரில் இந்திய கீச்சர்கள் வெளியிட்டுள்ள கருத்துகளை பாருங்கள்.

அமெரிக்கா போன்று

தேவயானி கோபர்கடே விவகாரத்தில் அமெரிக்கா நடந்து கொண்டதையும், இந்தியா இப்போது சவுதி விவகாரத்தில் நடந்துகொள்வதையும் ஒப்பீடு செய்துள்ளார் இந்த கீச்சர்.

ஆதாயம்

சவுதி, இந்தியா, நேபாள அரசுகளுக்கு இடைப்பட்ட பிரச்சினையாகத்தான் இது உள்ளது. யார் பக்கம் சாய்ந்தால் அதிக பலன் என்பதே பார்க்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்களை பற்றி யாருக்கும் கவலையில்லை என்கிறார் இவர்.

தண்டனை தேவை

கொலை, பலாத்காரம் செய்துவிட்டு, தூதரக அதிகாரி என்பதற்காக ஒருவர் தப்பிவிடலாமா.. இதுபோன்ற மோசமான வழக்குகளுக்காவது தண்டனை தேவை என்கிறார், சுமித் மிஷ்ரா.

சங்பரிவார் அமைதி

பலாத்கார வழக்கின் குற்றவாளியான சவுதி அதிகாரியை இந்தியாவை விட்டு தப்பிச்செல்ல மோடி அரசு உதவப்போகிறதா? இந்துக்கள் கவுரவத்தை காப்பாற்றும் சங்பரிவார் இப்போது எங்கே? என்று கொளுத்திப்போடுகிறார் அமித் ராவத்.

பெண்களுக்கே தண்டனை

இந்திய அரசு: இதுபோன்ற மோசமான குற்றங்களுக்கு தண்டனை அவசியம். சவுதி அரசு: நீங்கள் சொல்வது சரி. அந்த நேபாள பெண்களுக்கு பொது இடத்தில் வைத்து 100 கசையடி கொடுக்கலாம். இவ்வாறு கற்பனை பதிவு போட்டுள்ளார் 'திபேட்டாக்டர். சவுதி தனது அதிகாரிகளை பாதுகாக்க முயலுவதாக இப்படி மறைமுகமாக கேலி செய்கிறார் இந்த கீச்சர். இதில் உங்களை கவர்ந்த கீச்சு எது?

English summary
The Saudi diplomat accused of raping two Nepalese women has moved out of his Gurgaon flat and is currently at the Saudi embassy. The police cannot enter this premises unless there is a green signal from the Ministry for External Affairs. Social medias express its anger against this incident.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X