For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாஜக தலைவர்களிடம் இருந்து பெண்களை பாதுகாக்கும் நிலை உருவாகிவிட்டது; ராகுல் தாக்கு

பாஜகவிடம் இருந்து பெண்களை பாதுகாப்போம் என பேசியிருக்கிறார் ராகுல் காந்தி.

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: பெண்களை பாதுகாப்போம்; பெண்களுக்கு கல்வியை கொடுப்போம் என்கிற பேட்டி பச்சோ முழக்கத்தை பாஜக முன்வைத்தது. இப்போது பாஜக மற்றும் அதன் தலைவர்களிடம் இருந்து பெண் குழந்தைகளை காப்பாற்றும் நிலை உருவாகி உள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார்.

அரசியல் சாசனத்தை பாதுகாப்போம் என்கிற முழக்கத்துடன் காங்கிரஸ் பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறது. டெல்லியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பேசியதாவது:

Save daughters from the BJP, says Rahul

தேசம் பற்றி எரிந்தாலும், சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டாலும் தலித்துகள், சிறுபான்மையினர் உரிமைகள் அச்சுறுத்துப்பட்டாலும் மோடியைப் பொறுத்தவரையில் மீண்டும் பிரதமராவதில்தான் அக்கறை காட்டுகிறார். மோடி ஆட்சியில் அரசியல் சாசன விழுமியங்கள் அனைத்தும் சீர்குலைக்கப்பட்டுவிட்டன.

உச்சநீதிமன்றத்தை சீர்குலைத்துவிட்டனர். நாடாளுமன்றத்தை இழுத்து மூடிவிட்டனர். நீரவ் மோடி விவகாரம் உள்ளிட்டவை குறித்து 15 நிமிடம் என்னை பேச அனுமதிக்காமல் மோடி தப்பி ஓடுகிறார். மனித மலத்தை மனிதர்களே அள்ளுவதை புனிதமாக பார்க்கிறார் மோடி.

லோக்சபா தேர்தலுக்கு முன்னர் வேலை வாய்ப்பு உள்ளிட்டவை குறித்து மோடி அளித்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. இப்போது மோடி புதிய வாக்குறுதிகளை முன்வைத்து வாக்கு கேட்கிறார்.

பெண்களை பாதுகாப்போம்; பெண்களுக்கு கல்வியை கொடுப்போம் என்கிற பேட்டி பச்சோ முழக்கத்தை பாஜக முன்வைத்தது. இப்போது பாஜக மற்றும் அதன் தலைவர்களிடம் இருந்து பெண் குழந்தைகளை காப்பாற்றும் நிலை உருவாகி உள்ளது. நாடு எதிர்கொண்டிருக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண காங்கிரஸால் மட்டுமே முடியும்.

English summary
Congress President Rahul Gandhi said that women need to be saved from the BJP and its leaders.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X