For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேச துரோக வழக்கு.. லட்சத்தீவு நடிகை ஆயிஷா சுல்தானாவிற்கு முன் ஜாமீன்.. கேரளா ஹைகோர்ட் உத்தரவு

Google Oneindia Tamil News

லட்சத்தீவு: லட்சத்தீவை சேர்ந்த நடிகை மற்றும் மாடல் ஆயிஷா சுல்தானாவிற்கு கேரளா ஹைகோர்ட் முன் ஜாமீன் வழங்கி உள்ளது. தேச துரோக வழக்கில் முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

லட்சத்தீவு யூனியன் பிரதேசத்திற்கு தலைமை வகிக்க கூடிய நிர்வாகியாக பிரபுல் கோடா பட்டேல் நியமனம் செய்யப்பட்டதில் இருந்து பல்வேறு சர்ச்சைக்குரிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. கேரளாவோடு நெருக்கமான உறவு கொண்ட லட்சத்தீவை அந்த மாநிலத்தில் இருந்து பிரிக்கும் வகையில் சட்டங்களை இவர் இயற்றி வருகிறார்.

மலையாளிகள் பலர் இங்கே குடியிருக்கும் நிலையில், அவர்களுக்கு எதிராக கடும் சட்டங்களையும், விசித்திரமான விதிமுறைகளையும் பிரபுல் கோடா பட்டேல் நிறைவேற்றி வருகிறது. மாட்டிறைச்சி தடை தொடங்கி குண்டர் சட்டம் வரை அங்கு மக்களுக்கு எதிரான கொடுமையான சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன.

இதேநாளில் இந்திரா பிறப்பித்த அவசரநிலை பிரகடனம்-இன்று பொங்கும் பா.ஜ.க.- அன்று ஆதரித்த ஆர்.எஸ்.எஸ். இதேநாளில் இந்திரா பிறப்பித்த அவசரநிலை பிரகடனம்-இன்று பொங்கும் பா.ஜ.க.- அன்று ஆதரித்த ஆர்.எஸ்.எஸ்.

குஜராத்

குஜராத்

குஜராத்தை சேர்ந்த பிரபுல் கோடா பட்டேல் பாஜகவை சேர்ந்தவர். லட்சத்தீவு சட்டதிட்டங்களை வகுக்க கூடிய அதன் நிர்வாகியாக பிரபுல் கோடா பட்டேல் கடந்த டிசம்பரில் நியமிக்கப்பட்டார். இவர் லட்சத்தீவு நிர்வாகியாக பதவி ஏற்ற பின் லட்சத்தீவு கொரோனா கேஸ்களும் வேகமாக உயர்ந்தது.

கொரோனா

கொரோனா

அங்கு ஒரு ஆக்டிவ் கேஸ் கூட இல்லாத நிலையில் பிரபுல் கோடா பட்டேல் நிர்வாகத்திற்கு வந்த பின் 335 ஆக்டிவ் கேஸ்கள் ஏற்பட்டுள்ளன. கேரள மக்கள் இடையே பிரபுல் கோடா பட்டேல் எடுக்கும் நடவடிக்கைகள் கடக்கும் எதிர்ப்பை சந்தித்துள்ளன. இந்த நிலையில் பிரபுல் கோடா பட்டேலுக்கு எதிராக லட்சத்தீவை சேர்ந்த நடிகை மற்றும் மாடல் ஆயிஷா சுல்தானா தொலைக்காட்சி விவாதத்தில் தெரிவித்த கருத்து ஒன்று சர்ச்சையானது.

ஆயிஷா சுல்தானா

ஆயிஷா சுல்தானா

ஆயிஷா சுல்தானா தனது பேச்சில், லட்சத்தீவில் ஒரு கேஸ் கூட இல்லை. இப்போது 100க்கும் அதிகமான கேஸ்கள் பதிவாகி வருகின்றன. மத்திய அரசு லட்சத்தீவிற்கு பயோ ஆயுதத்தை அனுப்பி உள்ளது. நடக்க கூடிய விஷயங்களை பார்த்தால் பயோ ஆயுதத்தை களமிறக்கி உள்ளனர் என்றே சந்தேகம் ஏற்படுகிறது என்று குறிப்பிட்டார்.

வழக்கு

வழக்கு

இந்த பேச்சு சர்ச்சையான நிலையில், லட்சத்தீவு பாஜக தலைவர் ஆப்துல் காதர், இது தொடர்பாக புகார் அளித்தார். இதையடுத்து ஆயிஷா சுல்தானா மீது தேச துரோக வழக்கு பதியப்பட்டது. இவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்று கருதப்பட்டதால், கடந்த ஜூன் 14ம் தேதி கேரளா உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.

 ஜாமீன்

ஜாமீன்

இந்த நிலையில் இன்று கேரளா ஹைகோர்ட் ஆயிஷா சுல்தானாவிற்கு முன் ஜாமீன் கிடைத்துள்ளது. இது தொடர்பாக முன்பு பேஸ்புக்கில் போஸ்ட் செய்திருந்த ஆயிஷா சுல்தானா, என் மீது தவறான புகார் வைத்துள்ளனர். நான் மக்களோடு உடன் நிற்கிறேன். லட்சத்தீவு மண்ணோடு உடன் நிற்கிறேன். இந்த மண்ணுக்கு துரோகம் விளைவிப்பவர்கள் ஓரம்கட்டப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை, என்று சுல்தானா குறிப்பிட்டுள்ளார்.

ஹைகோர்ட்

ஹைகோர்ட்

முன்னதாக பிரபுல் கோடா பட்டேல் போட்ட பால் பண்ணைகள் மூடும் உத்தரவு, பள்ளிகள் அசைவ உணவு வழங்க தடை ஆகிய உத்தரவுகளுக்கு கேரளா ஹைகோர்ட் இடைக்கால தடை விதித்தது. இந்த நிலையில் தற்போது ஆயிஷா சுல்தானா முன் ஜாமீன் கிடைத்துள்ளது. லட்சத்தீவு சட்ட நிர்வாகத்தை கேரளாவில் இருந்து கர்நாடகாவிற்கு மாற்ற பிரபுல் கோடா பட்டேல் முயன்று வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
Save Lakshadweep: Actress and Model Aisha Sultana gets anticipatory bail from Kerala Hight Court in sedition case
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X