For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காசோலை, பாதுகாப்பு பெட்டக வசதி, குறைந்த பட்ச இருப்பு தொகை.. கெடுபிடி செய்யும் ஸ்டேட் வங்கி

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச மாதாந்திர சராசரி இருப்புத் தொகையை பராமரிக்காவிட்டால் அபராத கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை பாரத ஸ்டேட் வங்கி அமல்படுத்தியுள்ளது.

மேலும் பாதுகாப்பு பெட்டக வசதி, காசோலை வசதி உள்ளிட்ட வாடிக்கையாளர்கள் சேவைகளுக்கும் கட்டணத்தை உயர்த்தியுள்ளது அந்த வங்கி.

கடந்த மார்ச் வரையிலான நிலவரப்படி காசோலை வசதி பெறாத வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்பு கணக்கில்் குறைந்தபட்சம் ரூ.500 இருப்பு தொகை வைத்திருந்தால் போதும் என கூறிவந்தது. காசோலனை வசதி பெற்ற வாடிக்கையாளர்கள் ரூ.1000 இருப்பு வைத்திருக்க வேண்டும்.

சேமிப்பு விவரம்

சேமிப்பு விவரம்

இந்நிலையில் ஏப்ரல் 1ம்தேதி முதல் மேற்கண்ட தொகையை பெருநகரம், நகரம், சிறுநகரம், கிராமம் என தனித்தனியாக வகைப்படுத்தி வேறு வேறு கட்டணங்களை பாரத ஸ்டேட் வங்கி நிர்ணயித்துள்ளது. சென்னை, பெங்களூர் போன்ற பெருநகரங்களில் கணக்கு வைத்திருக்கும் சேமிப்புதாரர்கள் தங்ளது கணக்கில் மாதாந்திர சராசரி இருப்பு தொகையாக ரூ.5ஆயிரம் வைத்திருக்க வேண்டும். நகர்ப்புறத்தில் இருக்கும் வங்கியில் ரூ.3 ஆயிரமும், சிறிய நகர்ப்புறத்தில் இருக்கும் வங்கியில் ரூ.2 ஆயிரமும் வைத்திருக்க வேண்டும். கிராமங்கள் எனிலல் ரூ.1000 கட்டாயம்.

அபராதம்

அபராதம்

இப்படி இருப்பு வைக்காவிட்டால் பெருநகரங்களில் ரூ.100 வரை அபராதமும், நகரம், கிராமங்களில் ரூ.50 வரையும் அதிகபட்சமாக அபராதம் விதிக்கப்படும்.

பிரதமரின் ஜன்தன் யோஜனா திட்டத்தில் கணக்கு வைத்திருப்போர், அடிப்படை சேமிப்பு கணக்கு வைத்திருப்போருக்ககு இது பொருந்தாது.

பாதுகாப்பு பெட்டகம்

பாதுகாப்பு பெட்டகம்

பாதுகாப்பு பெட்டகத்திற்கான வாடகை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு பெட்டகத்தை கட்டணமின்றி பயன்படுத்தும் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. இனிமேல் பாதுகாப்பு பெட்டகத்தை ஆண்டுக்கு 12 முறை மட்டுமே இலவசமாக பயன்படுத்தலாம். அதற்கு மேல் பயன்படுத்தும் வாடிக்கையாளரிடம் ஒவ்வொரு முறையும் ரூ.100 கட்டணத்துடன் சேவை வரியும் வசூலிக்கப்படும்.

செக்

செக்

செக் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் நிதியாண்டில் 50 காசோலைகளை இலவசமாக பன்படுத்தலாாம். பிறகு ஒவ்வொரு காசோலனைக்கும் ரூ.3 கட்டணம். 25 காசோலனை கொண்ட புத்தகத்திற்கு ரூ.75 கட்டணம், மற்றும் சேவை வரி பெறப்படும். பாரத ஸ்டேட் வங்கியில் சமீபத்தில் 6 கிளை வங்கிகள் இணைந்தன. அந்த வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கும் இந்த புதிய அறிவிப்பு பொருந்தும்.

English summary
State Bank of India on Monday lowered lending rates but hiked charges for not maintaining minimum balance as well as for services like cheque books and lockers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X