For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மல்லையா வெளிநாட்டுக்குத் தப்பாமல் தடுக்கக் கோரி சுப்ரீ்ம் கோர்ட்டில் வங்கிகள் வழக்கு

Google Oneindia Tamil News

டெல்லி: பல ஆயிரம் கோடி அளவுக்கு வங்கிகளில் கடன் வாங்கி விட்டுத் திருப்பிச் செலுத்தாமல் உள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டைப் பறிமுதல் செய்து அவர் நாட்டை விட்டு தப்பிஓடி விடாமல் தடுக்கக் கோரி வங்கிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

பாரத ஸ்டேட் பாங்க் உள்ளிட்ட பல்வேறு வங்கிகள் இணைந்து இன்று இந்த வழக்கைத் தாக்கல் செய்தன. இந்த மனுவை நாளை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு எடுக்கிறது.

பாரத ஸ்டேட் பாங்க், பஞ்சாப் நேஷனல் பாங்க் உள்பட பல்வேறு வங்கிகளில் பல ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வாங்கியுள்ளார் மல்லையா. ஆனால்எதையுமே திருப்பிச் செலுத்தவில்லை.

SBI and other banks approach SC to restrain Maalya to escape from country

இந்த நிலையில் தனது யுனைட்டெட் புரூவரிஸ் நிறுவனத்தை இங்கிலாந்தைச் சேர்ந்த டியாஜியோவிடம் விற்று விட்டார். அதன் பின்னர் அதன் தலைவர் பதவியிலிருந்தும் விலகி விட்டார். டியாஜியோ நிறுவனம் மல்லையாவுக்கு ரூ. 515 கோடி நிதியையும் அளித்துள்ளது.

ஆனால் இந்தப் பணத்தை மல்லையா பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி கடன் மீட்பு தீர்ப்பாயத்தை பாரத ஸ்டேட் பாங்க் உள்ளிட்ட வங்கிகள் அணுகின. அதை விசாரித்த தீர்ப்பாயம் நேற்று அதற்கான இடைக்காலத் தடையை விதித்தது.

இந்த நிலையில் இன்று சுப்ரீம் கோர்ட்டில் பாரத ஸ்டேட் பாங்க் உள்ளிட்ட வங்கிகள் சார்பில் அவசரமாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் மல்லையா வெளிநாடு தப்பிச் செல்லமுயலுகிறார். அவரைத் தடுக்க வேண்டும். அவரது பாஸ்போர்ட்டைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.

English summary
The State Bank of India and other banks have moved the Supreme Court seeking to restrain Vijay Mallya from leaving the country.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X