For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குவியும் டெபாசிட்டுகள்... எஸ்பிஐ வங்கி டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 2% குறைவு

Google Oneindia Tamil News

டெல்லி: எஸ்.பி.ஐ வங்கியின் நிரந்தர வைப்பு தொகைக்கான வட்டி விகிதம் 2 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. 1 ஆண்டு வைப்பு தொகைக்கான வட்டி விகிதம் 1.75 சதவீதம் குறைக்கபப்ட்டுளள்து. மூத்த குடிமக்களுக்கான நிரந்தர வைப்பு தொகைக்கான வட்டி விகிதம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.

பழைய 500,1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக வங்கிகளில் டெபாசிட் குவிவதால் டெபாசிட் வட்டியை வங்கிகள் குறைத்து வருகின்றன. டெபாசிட் மீதான வட்டி குறைக்கப்பட்டதை அடுத்து கடன்களுக்கான வட்டி விகிதம் இன்னும் சில நாட்களில் குறைப்பதற்கான வாய்ப்பு உருவாகி இருக்கிறது.

SBI slashes bulk deposit rates by up to 1.9%

கடந்த வாரம் 390 நாட்கள் முதல் 2 வருடத்துக்கான டெபாசிட் வட்டி விகிதம் 7.25 சதவீதத்தில் இருந்து 7.10 சதவீதமாக ஐசிஐசிஐ வங்கி குறைத்திருக்கிறது.
அதேபோல ஒரு கோடி ரூபாய் முதல் ஐந்து கோடி ரூபாய் வரையிலான டெபாசிட்டுகளுக்கு (அனைத்து வகையாக காலம்) 0.25 சதவீதம் வட்டியை ஹெச்டிஎப்சி வங்கி குறைத்திருக்கிறது. ஒரு வருட டெபாசிட் விகிதம் 7 சதவீதத்தில் இருந்து 6.75 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல 3 வருடம் முதல் 5 வருடம் வரையிலான டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் 6.75 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாக குறைக்கப் பட்டிருக்கிறது.

இந்த நிலையில் இன்று இந்தியாவின் முன்னணி வங்கியான பாரத ஸ்டேட் வங்கி தற்போது ஒரு கோடி ரூபாய் முதல் 10 கோடி ரூபாய் வரையிலான வங்கி வட்டி விகிதத்தை 1.9% வரை அதிரடியாகக் குறைத்துள்ளது.

வட்டி குறைப்பைப் பொறுத்தவரை 7 முதல் 45 நாட்கள் வரையிலான டெபாசிட்களுக்கு 5% லிருந்து 3.75% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதைப்போல், 180 முதல் 210 நாட்கள் வரையிலான டெபாசிட் வட்டி விகிதம் 5.75% லிருந்து 3.85% ஆக குறைக்கப்பட்டுள்ளது. 211 நாட்கள் முதல் ஒரு வருடம் வரையிலான வட்டி விகிதத்துக்கு 5.75% லிருந்து 4% வரையிலும், ஒரு வருடத்திலிருந்து 3 ஆண்டுகளுக்கு உண்டான வட்டி விகிதம் 6% லிருந்து 4.25% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது 2016, நவம்பர் 24ம் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட நாள் முதல் வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் வரையிலான பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கிக்கு மட்டும் ரூ.1.15 லட்சம் கோடி டெபாசிட் ஆக கிடைத்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. எஸ்பிஐ வங்கியின் முடிவினை அடுத்து மற்ற வங்கிகளும் டெபாசிட்டுக்கான வட்டி விகிதத்தை குறைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
State Bank of India has lowered rates on bulk deposits between 125 and 190 basis points or bps across various maturities, paving the way for lower interest rates in the system. The cut in deposit rates is because of a fall in the cost of funds, as the banking system is flush with funds ever since the government scrapped Rs 500 and Rs 1,000 notes as legal tender on the evening of November 8.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X