For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பலாம்: தூர்தர்ஷனுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை தூர்தர்ஷன் நேரடியாக ஒளிபரப்பலாம் என்று உச்சநீதிமன்றம் இன்று அனுமதி அளித்து தீர்ப்பளித்துள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை தூர்தர்ஷன் ஒளிபரப்ப டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது. டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தூர்தர்ஷன் தொலைக்காட்சி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

உச்ச நீதிமன்ற விசாரணையின் போது, தூர்தர்ஷன் நேரடி ஒளிபரப்புக்கு டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது உச்ச நீதிமன்றம்.

SC allows DD to share World Cup feed with cable operators- for now

இந்த நிலையில், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்ப புதிய சேனல் ஒன்றை துவக்க முடியுமா என்று உச்ச நீதிமன்றம் தூர்தர்ஷன் நிர்வாகத்திடம் கேட்டிருந்தது. இதற்கு இன்று பதில் அளித்த தூர்தர்ஷன் நிர்வாகம், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்ப புதிய சேனல் துவக்க முடியாது என்று கூறியது.

இந்த விசாரணை முடிவடைந்த நிலையில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை நேரடியாக ஒளிபரப்ப உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து தீர்ப்பளித்தது.

English summary
Doordarshan can continue to share live feed of the 2015 Cricket World Cup matches with private cable operators as the Supreme Court on Friday stayed a Delhi High Court order preventing DD from doing so.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X