For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கருணாநிதி மகள் செல்விக்கு எதிரான நில அபகரிப்பு வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

கருணாநிதி மகள் செல்விக்கு எதிரான நில அபகரிப்பு வழக்கின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: திமுக தலைவர் கருணாநிதி மகள் செல்விக்கு எதிரான நில அபகரிப்பு வழக்கின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

செல்வி, மருமகன் ஜோதிமணிக்கு எதிராக நில அபகரிப்பு புகாரை முன்வைத்து சென்னை பூவிருந்தவல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

SC allows trial against Karunanidhi’s daughter in land grab case

அதே நேரத்தில் வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி செல்வியும் ஜோதிமணியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். முதலில் சென்னை உயர்நீதிமன்றம் இதை தள்ளுபடி செய்தது.

பின்னர் செல்வி, ஜோதிமணி தாக்கல் செய்த சீராய்வு மனு மீதான விசாரணையில் நீதிபதி சி.டி.செல்வம் இருவரையும் கடந்த ஆண்டு விடுவித்து உத்தரவு பிறப்பித்தார். இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இம்மனு மீது விசாரணை நடத்தியது உச்சநீதிமன்றம். இந்நிலையில் செல்விக்கு எதிரான வழக்கை விசாரிக்க அனுமதித்து உச்சநீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது,

English summary
The Supreme Court on Friday allowed an appeal filed by the Tamil Nadu government which had questioned the discharge of Selvi, daughter of M Karunanidhi in a case of alleged land grabbing.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X