For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அந்தப் பெண்ணிடம் மொபைல் பாஸ்வேர்டை கொடுங்கள்.. வன்புணர்வு குற்றவாளிகளுக்கு நீதிபதி வித்தியாசமான ஆணை

ஹரியானாவில் நடைபெற்று வரும் வன்புணர்வு வழக்கு ஒன்றில் வித்தியாசமான ஆணைப் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    குற்றவாளிகளுக்கு நீதிபதி கொடுத்த வித்தியாசமான தண்டனை- வீடியோ

    சண்டிகர்: ஹரியானாவில் 2015ல் கல்லூரி மாணவி ஒருவரால் பதியப்பட்ட வழக்கில் இந்த ஆணைப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்தப் பெண் அங்கு இருக்கும் போலீஸ் ஸ்டேஷனில் தன்னுடைய நண்பர்கள் மீது பாலியல் வன்புணர்வு புகார் அளித்தார்.

    இந்த வழக்கு நீண்ட நாட்களாக நடந்தது. கீழ் கோர்ட் தீர்ப்பு வழங்கி பின் அதற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டது.

    தற்போது இதில் வித்தியாசமான ஆணைப் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு இருக்கும் 3 பேரும் தங்கள் மொபைல் பாஸ்வேர்டை அந்தப் பெண்ணிடம் கொடுக்க வேண்டும் என்று ஆணைப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    தண்டனை

    தண்டனை

    முதலில் இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு எதிராக எல்லா ஆதாரமும் இருந்தது. புகைப்பட ஆதாரங்களும் இருந்தது. இதனால் கீழ் கோர்ட் இருவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. ஒருவருக்கு மட்டும் 7 ஆண்டுகள் தண்டனை வழங்கியது.

    வெளியே வந்தனர்

    வெளியே வந்தனர்

    இதை எதிர்த்து அந்த மூன்று பேரும் மேல்முறையீடு செய்தனர். இதனால் அவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் அளிக்கப்பட்டது. ஆனால் அந்தப் பெண் உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

    போன்

    போன்

    இதை விசாரித்த நீதிபதிகள் ''அந்தப் பெண்ணிடம் மூன்று பேரும் போன் பாஸ்வேர்ட், ஐ கிளவுட் பாஸ்வேர்ட் அளிக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார். உடனடியாக கொடுக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்து இருக்கிறார்கள்.

    காரணம்

    காரணம்

    அந்த மூன்று பேரில் யாரோ ஒருவர் அந்தப் பெண்ணுக்கு பழைய புகைப்படங்களை அனுப்பி மிரட்டி இருக்கிறார். இதை அந்தப் பெண்ணே வாங்கி நீக்க வேண்டும் என்பதற்காக இந்த ஆணைப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பின் வழக்கு விசாரணையை 20 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    English summary
    SC asks rape convicts to share phone password with victim. They have issued this order in order to stop the black mailing.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X