For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தகவல்களை பாதுகாக்க பேஸ்புக், வாட்ஸ் ஆப் கொள்கைகள் என்ன?... உச்சநீதிமன்றம் கேள்வி

வாடிக்கையாளர் குறித்த தகவலை வேறு நபருக்கு வழங்காததை உறுதி செய்ய பேஸ்புக், வாட்ஸ் ஆப் நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

டெல்லி: வாடிக்கையாளரின் தகவல்களை பாதுகாக்க எந்த கொள்கைகளை பேஸ்புக் மற்றும் வாட்ஸ் ஆப் ஆகிய நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

வாட்ஸ் ஆப் மற்றும் பேஸ்புக் ஆகிய சமூக வலைதளங்களில் கொடுக்கப்படும் தகவல்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

SC asks social medias to ensure the protection of details of customer

இதன்படி வாட்ஸ் ஆப் நிறுவனத்துக்கு மத்திய அரசுக்கு தகவல்களை ரகசியம் காப்பது குறித்து கடந்த ஜனவரி மாதம் உச்சநீதிமன்றம் விளக்கம் கோரியது. இதுகுறித்து கடந்த 4 மாதங்களாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தகவல் பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்கும் நடைமுறைகளை டிராய் செய்து வருவதாக அப்போதைய நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகி தெரிவித்திருந்தார்.

மேலும் வாட்ஸ் ஆப்பில் இருக்கும் தகவலை செல்போனில் இருந்து அழித்தாலும் வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் சர்வரில் இந்த தகவல்கள் அப்படியே இருப்பதாகவும் குற்றம்சாட்டபட்டது. இதைத் தொடர்ந்து சர்வரில் இருந்தும் விவரங்களை நீக்க வாட்ஸ் ஆப் நிறுவனத்துக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வாடிக்கையாளரின் தகவல்களை பாதுகாக்க எந்த கொள்கைகளை பேஸ்புக் மற்றும் வாட்ஸ் ஆப் ஆகிய நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன.

பேஸ்புக், வாட்ஸ் ஆப் நிறுவனங்கள் இன்னும் 4 வாரங்களுக்குள் வாடிக்கையாளர்களின் தகவல்களை பாதுகாப்பது தொடர்பான கொள்கைகள் குறித்து பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

English summary
SC orders Facebook and Whats App to file affidavit and ensure that the details of customer cannot be given to others.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X