For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மலேசியா அனந்தகிருஷ்ணன் ஆஜராகாததால் சுப்ரீம் கோர்ட் சீற்றம்.. ஏர்செல்-மேக்சிஸ் வருமானம் முடக்கம்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கில் அதன் உரிமையாளர் உட்பட குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அந்த நிறுவன வருவாயை முடக்கி வைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சராக தயாநிதி மாறன் பதவி வகித்த காலத்தில் ஏர்செல் நிறுவனத்தை மிரட்டி அதன் அதிகப்படியான பங்குகளை மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய வைத்தார் என்பது குற்றச்சாட்டு. சுமார் ரூ.742 கோடி மதிப்புள்ள லஞ்சம் கைமாறியுள்ளதாக குற்றம்சாட்டப்படும் இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் விசாரித்து வருகிறது.

SC bars Maxis from earning revenue till accused comes to court

மேக்சிஸ் உரிமையாளர் ஆனந்தகிருஷ்ணன் உள்ளிட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நால்வருக்கு எதிராக சம்மன் அனுப்பியும் அவர்கள் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது இதுகுறித்து நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்தது.

"இந்தியாவின் வளங்களில் இருந்து வருமானத்தை அனுபவித்துவிட்டு நீங்கள் ஓடி ஒழிய முடியாது. கோர்ட் சம்மனை மதித்தே ஆக வேண்டும்" என கூறிய உச்சநீதிமன்றம், குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள நால்வரும் நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் என கூறி, வழக்கை பிப்ரவரி 3ம் தேதிக்கு தள்ளி வைத்துவிட்டது.

முன்னதாக, ஏர்செல் உரிமையாளர்கள் மற்றும் கன்ட்ரோலர் கோர்ட்டில் ஆஜராக மறுத்தால், இன்னும் 2 வாரத்திற்குள் ஏர்செல் நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் அலைவரிசை முடக்கப்பட்டு மாற்றிவிடப்படும் எனவும் கோர்ட் எச்சரித்தது. மேலும் அடுத்த உத்தரவை பிறப்பிக்கும் வரையில், ஏர்செல்-மேக்சிஸ் நிறுவன வருமானம் முடக்கப்படும் எனவும், உரிமையாளர்களுக்கு அது போய் சேரக்கூடாது எனவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மேலும் மலேசியாவை சேர்ந்த இரு முன்னணி நாளிதழ்களில் கோர்ட் உத்தரவு குறித்த விவரத்தை வெளியிட மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

English summary
The SC said Aircel spectrum was to be seized & transferred within 2 weeks if the controller & owners did not appear in court in connection with the case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X