For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: விஜய் மல்லையா ஜூலை 10-ல் நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையா வரும் ஜூலை 10-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

டெல்லி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையா வரும் ஜூலை 10-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

கிங் பிரஷர் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் உரிமையாளரான விஜய் மல்லையா இந்திய பொதுத் துறை வங்கிகளிடம் இருந்து ரூ.9,000 கோடி கடன் பெற்றார். இந்நிலையில் கடனை திருப்பி செலுத்துமாறு அவருக்கு வங்கிகளி நெருக்கடி கொடுத்ததால் அவர் கடந்த 2016-ஆம் ஆண்டின் மார்ச் மாதம் இங்கிலாந்துக்கு தப்பி சென்றார்.

விஜய் மல்லையா மீது அமலாக்கப்பிரிவு மற்றும் சி.பி.ஐ. சார்பில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் அவரை இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வந்தது. இதுதொடர்பாக இங்கிலாந்து அரசிடம் இந்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியது.

 லண்டனில் கைது

லண்டனில் கைது

இந்நிலையில் மல்லையா கடந்த 18-ஆம் தேதி லண்டன் லண்டன் பெருநகர போலீஸ் கைது செய்தது. இதைத் தொடர்ந்து அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவது குறித்து இந்திய அரசு ஆலோசனை நடத்தி வந்தது. இந்நிலையில் இந்தியாவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையே நாடு கடத்தும் ஒப்பந்தத்தில் ஏற்பட்ட குழப்பத்தால் அதில் சிக்கல் நீடித்து வந்தது.

 சிபிஐ அதிகாரிகள் லண்டனில் முகாம்

சிபிஐ அதிகாரிகள் லண்டனில் முகாம்

இந்நிலையில் விஜய் மல்லையாவை நாடு கடத்தும் விவகாரம் குறித்து இங்கிலாந்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த சிபிஐ அதிகாரிகளும், அமலாக்கத் துறை அதிகாரிகளும் லண்டனில் முகாமிட்டனர். இந்நிலையில் விஜய் மல்லையா மீது வங்கிகள் சம்மேளம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

 உச்ச நீதிமன்றம் ஆணை

உச்ச நீதிமன்றம் ஆணை

அப்போது விஜய் மல்லையா நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும் அவர் ஆஜராகாமல் அவரது வழக்கறிஞர் ஆஜரானார். இதைத் தொடர்ந்து அவரது சொத்து விவரங்களை அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி மல்லையாவும் அதன் விவரங்களை தாக்கல் செய்தார்.

 விசாரணையில் அதிரடி

விசாரணையில் அதிரடி

இந்த சொத்து விவரங்களில் விஜய் மல்லையா உண்மைக்கு புறம்பான தகவல்களை கொடுத்துள்ளார். அவை அனைத்தும் போலியானவே என்பதால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று வங்கிகள் சம்மேளம் வழக்கு தொடுத்தது. இதன் மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடத்தப்பட்டது.

 ஜூலை 10-இல் நேரில் ஆஜராக....

ஜூலை 10-இல் நேரில் ஆஜராக....

அப்போது நீதிபதிகள் சொத்து விவரங்களை போலியாக தாக்கல் செய்த விஜய் மல்லையாவை கண்டனம் தெரிவித்தனர். மேலும் அவர் வரும் ஜூலை 10-ஆம் தேதி நேரில் தனிப்பட்ட முறையில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். இந்த உத்தரவானது மல்லையாவை நாடு கடத்தும் பணிகளில் இருந்து துரிதப்படுத்தும் என்று தெரிகிறது.

English summary
The Supreme Court has convicted liquor baron, Vijay Mallya for contempt of court. The court ordered that Vijay Mallya be present before it on July 10. The conviction was ordered in connection with a loan default case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X