For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சந்தையூர் தீண்டாமை சுவர் விவகாரம் : மதுரை ஆட்சியர் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு

சந்தையூர் தீண்டாமை சுவர் விவகாரத்தில் மதுரை ஆட்சியர் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

டெல்லி : மதுரையில் சர்ச்சைக்குரிய சந்தையூர் தீண்டாமை சுவர் விவகாரத்தில், மதுரை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையில் சந்தையூர் என்கிற கிராமத்தில் கட்டப்பட்ட தீண்டாமைச் சுவர் காரணமாக மிகப்பெரிய சர்ச்சை எழுந்தது. இதனால், இரு தரப்பினரிடையே மோதல் எழுந்தது.

SC demands Madurai Collector explanation on Santhaiyur Case

இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், சுவரை இடிக்க உத்தரவிடப்பட்டது. ஆனால், இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், சர்ச்சைக்குரிய சுவர் அமைக்கப்பட்டுள்ள இடம் அரசுக்கு சொந்தமானதா என்று கேள்வி எழுப்பியதோடு, அதற்கான ஆவணங்களை சமர்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து, மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகஸ்ட் முதல் வாரத்தில் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

English summary
SC demands Madurai Collector explanation on Santhaiyur Case. The appeal on Demolition of Santhaiyur Wall case heard on Supreme Court Today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X