For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விஜயகாந்த் தேர்தல் வெற்றியை எதிர்த்த மனு: சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் தேர்தல் வெற்றியை எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். ஜெயந்தி என்பவரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

ரிஷிவந்தியத்தில் விஜயகாந்த் வெற்றியை எதிர்த்து சுயேச்சை வேட்பாளர் ஜெயந்தி என்பவர் வழக்கு தொடர்ந்தார். மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் உச்சநீதிமன்றத்தில் ஜெயந்தி மேல்முறையீடு செய்தார்.

அவர் தன் மனுவில், "விஜயகாந்தின், எம்.எல்.ஏ., பதவியை செல்லாததாக ஆக்க வேண்டும். அவருக்கு, எம்.எல்.ஏ.,வுக்கான அந்தஸ்து, சலுகை எதையும் வழங்கக் கூடாது' என, வலியுறுத்தி இருந்தார்.

SC dismisses election petition against Vijayakanth

தமிழகத்தின் ரிஷிவந்தியம் தொகுதியில், தான் போட்டியிட முடியாத வகையில், தன் வேட்பு மனுவை, சில, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கிழித்ததால், சரியான நேரத்தில், வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாமல் போனது. அதனால், விஜயகாந்த், போட்டியிட்டு வெற்றி பெற்றார் என, அந்தப் பெண், தன் மனுவில் தெரிவிந்திருந்தார்.

இது குறித்து, அவர் தொடர்ந்த வழக்கை, தள்ளுபடி செய்த, சென்னை, உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும், தன் மனுவில், ஜெயந்தி கோரியிருந்தார்.

மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மனுதாரர் தாமதமாக மேல்முறையீடு செய்துள்ளதால் மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தனர்.

English summary
The Supreme Court on Friday dismissed an election petition against Desiya Murpokku Dravida Kazhagam (DMDK) founder and leader of Opposition in the assembly, Vijayakanth. M Jayanthi, a disqualified independent candidate from the Rishivanthiyam assembly segment, filed the petition challenging the election of Vijayakanth from the constituency.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X