For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீதிமன்றங்களில் தேசிய கீதத்தை கட்டாயமாக்க மனு- சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி

நாடு முழுவதும் நீதிமன்றங்களில் தேசிய கீதத்தை கட்டாயம் இசைக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: நாடு முழுவதும் திரையரங்குகளில் படக் காட்சிக்கு முன் தேசிய கீதத்தை கட்டாயமாக இசைக்க வேண்டும். அவ்வாறாக திரையரங்குகளில் தேசிய கீதத்தை இசைக்கும்போது பொதுமக்கள் அரங்கில் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்று சில தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டது.

இந்த நிலையில் நீதிமன்றத்தில் தேசிய கீதம் இசைக்கப்படுவதை கட்டாயமாக்க வேண்டும் என்று பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

SC dismisses plea National anthem must be played in Court

கடந்த இரு தினங்களுக்கு முன்பு தேசிய கீதம் இசைக்கப்படுவது தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், தேசியக் கொடியை திரையிட வேண்டும். தேசிய கீதம் இசைக்கப்படும்போது அதில் எவ்வித விளம்பர ஆதாயமும் தேடக்கூடாது.

தேசிய கீத வரிகளை விரும்பத்தகாத பொருட்களின் மீது அச்சிடக் கூடாது. திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படும்போது அனைத்து வாயில் கதவுகளும் அடைக்கப்பட்டிருக்க வேண்டும்.

இப்போதெல்லாம் மக்களில் பலருக்கு தேசிய கீதத்தை எப்படி பாடுவது என்றே தெரியவில்லை. தேசிய கீதத்துக்கும், தேசியக் கொடிக்கும் மரியாதை செலுத் துவது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

திரையரங்குகளில் படக் காட்சிக்கு முன் தேசிய கீதத்தை கட்டாயமாக இசைக்க வேண்டும் என்ற உத்தரவை செயல்படுத்தாத சினிமா திரையரங்குகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை நடைமுறைபடுத்துவதாக மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.

இதனிடையே நீதிமன்றங்களில் தேசிய கீதம் இசைப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்ற மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

English summary
The Supreme Court on Friday dismissed the plea court across the country to play the national anthem.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X