For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி தஹில் ரமாணி மீது முறைகேடு புகார்.. சிபிஐ விசாரிக்க உத்தரவு

Google Oneindia Tamil News

Recommended Video

    Tahilramani | தஹில் ரமாணி மீது முறைகேடு புகார்.. சிபிஐ விசாரிக்க உத்தரவு-வீடியோ

    டெல்லி: சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி தஹில் ரமாணி மீது முறைகேடு புகார் எழுந்ததை அடுத்து சிபிஐ விசாரிக்க சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமாணி சிலை கடத்தல் வழக்குகளை விசாரித்து வந்த நீதிபதி மகாதேவன் அமர்வை கலைத்து உத்தரவிட்டார். இதையடுத்து ரமாணி மேகாலயாவுக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார்.

    அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைமை நீதிபதி பதவியிலிருந்து ரமாணி விலகினார். இந்த நிலையில் சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகளில் 2 வீடுகளை வாங்கியதாக புகார் எழுந்துள்ளது.

    என்னை பதவியை விட்டு நீக்க முயற்சிப்பது வரலாற்று ஊழல்.. டிரம்ப் ஆவேசம்என்னை பதவியை விட்டு நீக்க முயற்சிப்பது வரலாற்று ஊழல்.. டிரம்ப் ஆவேசம்

    5 பக்க அறிக்கை

    5 பக்க அறிக்கை

    சென்னை புறநகர் பகுதியில் 3.18 கோடிக்கு அடுக்குமாடி குடியிருப்புகளில் இரு வீடுகளை வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது. தஹில் ரமாணி பதவி விலகிய பின்னர் மத்திய உளவுத் துறை 5 பக்க அறிக்கையை அனுப்பியுள்ளது.

    உத்தரவு

    உத்தரவு

    அந்த அறிக்கையில் அடுக்குமாடி குடியிருப்புகள் வாங்கியது குறித்தும் சிலைக் கடத்தல் வழக்குகளுக்கான சிறப்பு அமர்வை கலைத்தது குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கியது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டுள்ளார்.

    குற்றச்சாட்டு

    குற்றச்சாட்டு

    இதுகுறித்து தஹில் ரமாணியிடம் கேட்டபோது இன்று வரை நான் எந்தவிவகாரத்துக்கும் கருத்து சொல்லவில்லை. இதுதான் என் நிலைப்பாடு என்றார். சென்னை புறநகர் பகுதியில் செம்மஞ்சேரி மற்றும் திருவிடந்தையில் லோரைன் டவரில் இரு புதிய வீடுகளை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    லோன்

    லோன்

    அந்த வீடுகளை வாங்க மொத்தம் 3.18 கோடி தொகையில் எச்டிஎஃப்சி வங்கியிலிருந்து ரூ.1.62 கோடி கடன் பெற்றுள்ளது தெரியவந்தது. மீதமுள்ள 1.56 கோடியை தனது சொந்த பணத்திலிருந்து ஜூன்- ஜூலை 2019 செலுத்தியுள்ளார். அவருக்கு 6 வங்கிக் கணக்குகள் உள்ளன.

    காசோலை

    காசோலை

    அவற்றில் 3 கணக்குகளை அவரது கணவருடன் இணைந்து வைத்துள்ளார். ஒன்று தாயுடனும், மற்றொன்று ஊதிய கணக்கும், இன்னொன்று அவரது மகனுடையது என தெரியவந்தது. கடந்த ஜூலை 8-ஆம் தேதி 18 லட்சம் பணம் அவரது தாயுடன் உள்ள ஜாயின்ட் அக்கவுண்டில் செலுத்தப்பட்டு அடுத்த மாதமே அந்த பணம் காசோலை மூலம் எடுக்கப்பட்டுள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவத்துள்ளன.

    English summary
    Chief Justice of India ordered CBI to take action on misconduct charges against TahilRamani.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X