For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழக விவசாயிகள் தற்கொலை.. திங்கள்கிழமைக்குள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழக விவசாயிகள் தற்கொலை குறித்து திங்கள்கிழமைக்குள் தமிழக அரசு உரிய பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

டெல்லி: தமிழக விவசாயிகள் தற்கொலை குறித்த மனு மீதான விசாரணையின் போது திங்கள்கிழமைக்குள் தமிழக அரசு உரிய பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டதால் தமிழகத்தில் கடும் வறட்சி நிலவியது. இதனால் நீரின்றி விவசாயப் பயிர்கள் கருகி, போட்ட முதலையும் எடுக்க முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர்.

இதனால் மனமுடைந்த 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இது தமிழகத்தையே பதைபதைக்க வைத்தது.

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

விவசாயத்தையும், விவசாயிகளையும் காப்பாற்ற தமிழக அரசு எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும் நீரின்றி பயிர்கள் நாசமானதாலும், விவசாயத்துக்கான வங்கிக் கடன் சுமையாலும் பல விவசாயிகள் வேதனையடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

முழு பூசணிக்காயை...

முழு பூசணிக்காயை...

அப்போது வாதாடிய தமிழக அரசு வழக்கறிஞர், விவசாயிகள் யாரும் வறட்சியால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கவில்லை என்றும் அவரவர் உடல் நல பாதிப்புகளால் உயிரிழந்துவிட்டனர் என்றும் வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட வாதி தரப்பு வழக்கறிஞர், உடல்நல பாதிப்புகளால் உயிரிழந்த விவசாயிகளுக்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி அளித்தது ஏன் என்று கேள்வி எழுப்பினார். இதையடுத்து அரசு சார்பில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பது குறித்து மே 2-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய கோர்ட் உத்தரவிட்டது.

இன்று விசாரணை

இன்று விசாரணை

அந்த வழக்கானது இன்று ஒத்திவைக்கப்பட்டது. இன்று தமிழக அரசின் பதில் மனு மீது நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, கன்வில்கர் மற்றும் சந்தான கவுடர் ஆகிய 3 அமர்வு முன்னர் விசாரிக்கப்பட்டது. அப்போது தமிழக அரசுக்கு சரமாரியாக நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

சரமாரி கேள்வி

சரமாரி கேள்வி

விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை பற்றி விவசாயிகளுக்கு தெரியுமா?, ஆதரவு விலை குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளதா?, விளை பொருளை வாங்க போதிய கொள்முதல் நிலையங்கள் உள்ளனவா? என்பன உள்ளிட்ட கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், விவசாயிகள் தற்கொலை குறித்தும், தங்களின் கேள்விகள் குறித்தும் உரிய பதிலை வரும் திங்கள்கிழமைக்குள் அளிக்க வேண்டும் உத்தரவிட்டனர்.

English summary
TN farmers suicide case: SC orders TN govt to give response within Monday regarding their suicides. Then also ordered to answer the questions raised by Judges.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X