For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரி தீர்ப்புக்கு எதிரான கேரள அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி

காவிரி தீர்ப்புக்கு எதிரான கேரள அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

டெல்லி: காவிரி தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

காவிரி விவகாரத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் கர்நாடகம், கேரளம், புதுவை, தமிழகம் ஆகிய 4 மாநிலங்களுக்கு காவிரி நீர் பங்கிட்டு வழங்கப்படும்.

SC rejects the plea submitted by Kerala government against to Cauvery issue

எந்த நதியும் எந்த ஒரு குறிப்பிட்ட மாநிலத்துக்கு சொந்தமானது அல்ல. காவிரி நீரை பங்கிடுவது தொடர்பாக ஒரு குழுவை தொடங்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் காவிரி நீரை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க கேரள அரசு திட்டமிட்டது. அதன்படி உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தது. அதன் மீதான விசாரணை இன்று வந்தது.

அப்போது காவிரி இறுதித் தீர்ப்பில் மாற்றம் செய்யக் கோரியும் கேரளா அரசு மனு செய்திருந்தது. இந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

English summary
Supreme court rejects the review petition submitted by Kerala Government against Cauvey issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X