For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரூபாய் நோட்டு தடை விவகாரத்தை கையாளப் போவது எப்படி? மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: ரூபாய் நோட்டு தடை விவகாரத்தை மத்திய அரசு எப்படி கையாளப் போகிறது என்பது குறித்து விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு எதிரான வழக்குகள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசை உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியது.

SC seeks Centre's affidavit on demonetisation decision

ரூ500, ரூ1,000 நோட்டுகள் வைத்திருப்பவர்கள் அனைவருமே கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் அல்ல என்று குட்டு வைத்தது உச்சநீதிமன்றம். மேலும் ரூபாய் நோட்டு தடையால் எழுந்துள்ள தற்போதைய சூழ்நிலையை எப்படி கையாளப் போகிறது? என்பது குறித்த பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் மத்திய அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்றும் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு தடை இல்லை என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் 25-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

English summary
Supreme court seeks Centre's affidavit on PIL filed by various petitioners challenging Govt's demonetisation decision.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X