For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கதுவா வன்புணர்வு வழக்கு.. பஞ்சாப் நீதிமன்றத்திற்கு அதிரடியாக மாற்றிய உச்ச நீதிமன்றம்

காஷ்மீரில் வன்புணர்வு செய்து கொல்லப்பட்ட 8 வயது சிறுமியின் வழக்கை காஷ்மீரில் இருந்து பஞ்சாப் பதன்கோட் நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் மாற்றியுள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

டெல்லி: காஷ்மீரில் வன்புணர்வு செய்து கொல்லப்பட்ட 8 வயது சிறுமியின் வழக்கை காஷ்மீரில் இருந்து பஞ்சாப் பதன்கோட் நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் மாற்றியுள்ளது.

காஷ்மீரில் இருக்கும் கதுவா என்ற கிராமத்தை சேர்ந்த 8 வயது பள்ளி படிக்கும் சிறுமி 7 பேரால் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த கொலை மற்றும் வன்புணர்வு வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

SC transfers Kathua rape and murder out of J&K, trial to be conducted in Pathankot

இதில் தொடர்புடைய எல்லோரும் பாஜக உள்ளிட்ட பல்வேறு இந்துத்துவா அமைப்புகளுடன் நெருக்கமாக இருப்பவர்கள். இந்த விஷயம் காரணமாக பாஜக கட்சியை சேர்ந்த சிலர், குற்றவாளிகளுக்கு ஆதரவாக பேசியுள்ளனர். இதுகுறித்த வழக்கு காஷ்மீர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.

தற்போது இந்த வழக்கை காஷ்மீரில் இருந்து பஞ்சாப் பதன்கோட் நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் மாற்றியுள்ளது. காஷ்மீர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தால் நேர்மையாக நடக்காது என்று பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. இதையடுத்து தற்போது இந்த வழக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த வழக்கை தினமும் விசாரிக்கும் படி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. விடுமுறை தினம் தவிர மற்ற நாட்களில் வழக்கை தள்ளி போட கூடாது என்றுள்ளது. மேலும் வழக்கை உச்ச நீதிமன்றம் கண்காணிக்கும் என்றுள்ளது. அதேபோல் காஷ்மீர் அரசு சார்பில் சிறப்பு வழக்கறிஞரை நியமிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கில் முக்கியமாக அந்த சிறுமியின் குடும்பத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் சிறுமியின் குடும்பத்தினர் சார்பாக வாதாடும் பெண் வழங்கறிஞருக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

English summary
The Supreme Court has ordered the transfer of the trial in the Kathua rape and murder case to Punjab. The case which is being heard in Jammu and Kashmir will now be heard in Pathankot in Punjab. The SC also ordered that the trial would be in-camera on a day to day basis with no adjournments. The court, however, allowed the state of Jammu and Kashmir to appoint a special public prosecutor to conduct the trial.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X