For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குழந்தைகளை தாக்கும் ஸ்கார்லெட் நோய்.. 90களின் பூதம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கிறது

90 களில் மிகவும் கொடிய நோயாக இருந்த ஸ்கார்லெட் நோய் மீண்டும் விஸ்வரூபம் எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

டெல்லி: 90 களில் மிகவும் கொடிய நோயாக இருந்த ஸ்கார்லெட் நோய் மீண்டும் விஸ்வரூபம் எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஸ்கார்லெட் நோய் பொதுவாக குழந்தைகளை பாதிக்கும் நோயாகும்.

தற்போது இந்த நோய் அறிகுறி உள்ள மக்கள் பல நாடுகளில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்ட்டுள்ளனர். இந்தியாவிலும் இந்த நோய் ஒருகாலத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்த நோயின் அறிகுறியில் இருந்து சிகிச்சைகள் வரை மக்கள் தெரிந்து கொள்ள இதில் பல விஷயங்கள் இருக்கிறது.

ஸ்கார்லெட் நோய்

ஸ்கார்லெட் நோய்

ஸ்கார்லெட் நோய் ஒருகாலத்தில் இங்கிலாந்தை பயமுறுத்திக் கொண்டு இருந்த நோய் ஆகும் இது. இந்த நோய் காரணமாக குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள். 90களின் இறுதியில் இந்த நோய் காரணமாக அதிக பேர் பாதிக்கப்பட்டார்கள். இந்தியாவிலும் இந்த நோயால் பலர் பாதிப்புக்கு உள்ளானார்கள். உடல் முழுக்க சிவப்பு புள்ளிகள் தோன்றும், தொண்டை வலிக்கும், உடல் மொத்தத்தையும் உருகுலைக்கும் கொடிய நோய் ஆகும் இது.

அறிகுறிகள்

அறிகுறிகள்

இந்த நோயின் முக்கிய பிரச்சனையே இதன் அறிகுறிகள்தான். சாதராண உடல் காய்ச்சலுக்கு ஏற்படக்கூடிய அதே அறிகுறிகள் தான் இந்த நோய்க்கும் ஏற்படும். அதன் காரணமாக மக்கள் அலட்சியமாக விட்டுவிட வாய்ப்பு இருக்கிறது. காய்ச்சல், தொண்டை வலி, இருமல், உடல் சிவப்பது உள்ளிட்ட அறிகுறிகள் தோன்றும். சாதாரண அறிகுறிகள் கொண்ட இந்த நோய் தான் 90களில் 1 லட்சம் பேரின் உயிரை பறித்தது.

மீண்டும்

மீண்டும்

இந்த கொடூரமான நோய் தற்போது மீண்டும் வந்துள்ளது. 2016ல் இருந்து இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் பலர் இந்த நோய் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதி ஆகியுள்ளனர். இந்தியாவிலும் சிலர் இந்த நோய் அறிகுறியுடன் அனுமதி ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. 2016ல் மட்டும் 1,000 க்கும் அதிகமான மக்களுக்கு இந்த நோய் அறிகுறிகள் இருந்துள்ளது. இதன் காரணமாக இந்த நோய் மீண்டும் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

தீர்வு என்ன

தீர்வு என்ன

தொடக்க காலத்தில் இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கபடவில்லை. இது தற்போதும் கொடிய நோயாகவே உள்ளது. இதற்கு முழுக்க முழுக்க தீர்வு கண்டுபிடிக்கபடவில்லை என்றாலும் கட்டுப்படுத்த வழிகள் உள்ளது, இதற்கு சரியான தடுப்பூசி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. மேலும் இந்த நோய்க்கான காரணமும் இன்னும் முழுமையாக கண்டுபிடிக்கப்படவில்லை. பலர் பலவிதமாக காரணம் தெரிவிக்கின்றனர். இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

English summary
Scarlet fever coming back after decades. It is one of rare worst diseases of 19th century, which affects children.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X