For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேசிய கீதத்தை சத்தமாக பாடாததால் தாக்கப்பட்ட மாணவிகள்.. ஜெய்ப்பூர் பள்ளியில் நடந்த கொடுமை

ஜெய்ப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் தேசிய கீதத்தை சத்தமாக பாடாததால் மாணவிகள் தாக்கப்பட்டு இருக்கிறார்கள்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் தேசிய கீதத்தை சத்தமாக பாடாததால் மாணவிகள் தாக்கப்பட்டு இருக்கிறார்கள். பள்ளியின் தலைமை ஆசிரியரே இந்த கொடுமையை செய்து இருக்கிறார்.

இந்த சம்பவம் காரணமாக அந்த பள்ளியில் உள்ள மாணவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். தற்போது போலீஸ் அந்த பள்ளிக்கு சென்று விசாரித்து வருகிறார்கள்.

அதேபோல் மாணவியின் பெற்றோர்களும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் அந்த பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.

சத்தம் இல்லை

சத்தம் இல்லை

ராஜ்கிய ஆதர்ஷ் உச் மாத்யமிக் வித்யாலயா என்ற பள்ளியில் நேற்று இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. பள்ளியில் உள்ள நான்கு மாணவிகள் ஒன்றாக சேர்ந்து காலை தேசிய கீதம் பாடி இருக்கிறார்கள். அவர்கள் சத்தமாக பாடவில்லை என்று தலைமை ஆசிரியர் திட்டி இருக்கிறார்.

மோசமான தண்டனை

மோசமான தண்டனை

ஆனாலும் கோபம் அடங்காத அவர் நான்கு போரையும் மோசமாக தாக்கி இருக்கிறார். பின் வெளியே வெயிலில் நான்கு மணி நேரம் நிற்க வைத்துள்ளார். அவர் அந்த இடத்திலேயே இதனால் மயக்கம் அடைந்துள்ளனர்.

மருத்துவமனை

மருத்துவமனை

இதனால் உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்கள். நான்கு பேரில் ஒரு மாணவியின் உடல் நிலை மட்டும் இன்று வரை மோசமாக இருக்கிறது. அந்த மாணவிதான் மிகவும் மோசமாக தாக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் போராட்டம்

மக்கள் போராட்டம்

இதனால் அந்த மாணவியின் பெற்றோர்கள் அங்கு போராட்டம் நடத்தி வருகிறார்கள். மற்ற மாணவர்களின் பெற்றோர்களும் அங்கு போராட்டம் நடத்தி வருகிறார்கள். பள்ளியின் தலைமை ஆசிரியரை பணியைவிட்டு நீக்க உத்தரவிட்டு இருக்கிறார்கள்.

English summary
School girls thrashed for singing national anthem not loudly in Jaipur. Parents of the students protesting outside the school campus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X