For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பென்சில், நோட்டு புத்தகம் வாங்க பணமில்லை.... சிறுமி தீக்குளிப்பு

By Veera Kumar
Google Oneindia Tamil News

புவனேஸ்வர்: பென்சில், நோட்டு புத்தகம் வாங்க பணமில்லை என்று பெற்றோர் கூறியதை கேட்டு மனமுடைந்த 14 வயது சிறுமி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட பரிதாப சம்பவம் ஒடிசாவில் நடந்துள்ளது.

ஒடிசா மாநிலத்தின் கஞ்சம் மாவட்டத்திலுள்ள அஸ்கா என்ற நகரத்தை சேர்ந்தவர் பிஜோய் நாயக். தினக்கூலி தொழிலாளி. இவரது மனைவி ஈஸ்வரி வீட்டு வேலைகள் செய்து வருகிறார். சமீபத்தில் ஏற்பட்ட பக்கவாதம் காரணமாக பிஜோய்நாயக் வேலைக்கு செல்லமுடியாமல் வீட்டிலேயே இருந்து வருகிறார்.

இவர்களது 14வயது மகள் ஜெயந்தி, 7ம் வகுப்பு படித்து வந்தாள். இந்நிலையில், வகுப்பு ஆசிரியர் பென்சில், நோட்டு புத்தகம் உள்ளிட்டவை கொண்டுவருமாறு ஜெயந்தியிடம் கூறியுள்ளார். இதுகுறித்து பெற்றோரிடம் கேட்டதற்கு, தற்போது பணம் இல்லை, ஏற்பாடு செய்து வாங்கி தருகிறோம் என்று கூறியுள்ளனர்.

மறுநாள், வகுப்புக்கு சென்ற ஜெயந்தியிடம் பென்சில், நோட்டுபுத்தகம் இல்லாதது பற்றி, சக மாணவிகள் கேலியும், கிண்டலும் செய்துள்ளனர். ஏழ்மையால், அவமானமடைந்த ஜெயந்தி, வீட்டுக்கு வந்த பிறகு உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீவைத்து தற்கொலை செய்ய முயன்றார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் ஜெயந்தியின் உடலில் பரவிய தீயை அணைத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 50 சதவீத தீக்காயங்களுடன் அவதிப்பட்ட ஜெயந்தி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள்.

வாட்டும் வறுமையின் வெப்பத்தைவிட, பற்றி எரியும் தீயின் வெப்பம் குறைந்ததுதான், என்று எண்ணிய அந்த இளம் தளிர் கருகி வீழ்ந்த சம்பவம் ஓடிசாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடையை மூடும் வரை போராட்டம்

இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தியதற்கு பாலபாரதி எம்.எல்.ஏ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் கருத்து கூறியுள்ள பாலபாரதி எம்.எல்.ஏ, கடையை மூடும்வரை நான் சிறையில் இருக்க விரும்புகிறேன். பொதுமக்களின் குறைந்தபட்ச கோரிக்கையைக் கூட நிறைவேற்றாத நிர்வாகத்தில் நானும் ஒரு எம்.எல்.ஏ என சொல்லிக்கொண்டு வெளியில் நடமாடுவதைக் காட்டிலும், சிறை செல்வதே மேல், போராட்டம் வெல்ல ஒன்றுபடுங்கள் ஆதரவு தெரிவியுங்கள் என்று என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

English summary
A 14-year-old girl committed suicide in Odisha after her parents said they didn't have enough money to buy her basic stationery like pencil and notebook and other study materials.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X