For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மலர்ந்த பூக்களாக புன்னகையுடன் சென்ற குழந்தைகள்! காஷ்மீரில் 6 மாதத்திற்கு பின் பள்ளிகள் திறப்பு

Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஏறக்குறைய ஏழு மாதங்களுக்கு பிறகு சீருடைகளை அணிந்த பள்ளி மாணவர்கள், மகிழ்ச்சியோடு தங்கள் பள்ளிக்கு சென்றனர். மலர்ந்த பூக்களை போல் மகிழ்ச்சியோடு பள்ளிகளுக்கு குழந்தைகள் சென்றார்கள்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசன பிரிவான 370ஐ மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்தது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.

Schools in Kashmir reopen after nearly seven months

இந்த அதிரடி நடவடிக்கைக்கு பின் அசாம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது.

மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பிய நிலையில் படிப்படியாக ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு தளர்த்தியது. இணைய சேவைகள் சீரானது. சுற்றுலாவுக்கு வழக்கம் போல் அனுமதி வழங்கப்பட்டது. இந்த சூழலில் சுமார் 7 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.

Schools in Kashmir reopen after nearly seven months

மலர்ந்த பூக்களை போல் புன்னகைத்தபடி உற்சாகமாக பள்ளிக்கு குழந்தைகள் சென்றன. ஒரு தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கும் மாணவி ஜியா ஜாவேத் கூறுகையில், பல மாதங்களுக்கு பிறகு பள்ளிக்கு மீண்டும் வருவது மகிழ்ச்சியாக இருந்தது. வீட்டிலேயே இருந்தது எனக்கு சலிப்பாக இருந்தது. இப்போது நண்பர்கள், பள்ளி வகுப்பு தோழர்களுடன் மீண்டும் இருப்பது உற்சாகமாக இருக்கிறது என்றாள்.

அகமதாபாத்தில் அமெரிக்கா அதிபர் டிரம்ப்- சபர்மதி ஆசிரமத்தை உணர்வுப்பூர்வமாக பார்வையிட்டார்அகமதாபாத்தில் அமெரிக்கா அதிபர் டிரம்ப்- சபர்மதி ஆசிரமத்தை உணர்வுப்பூர்வமாக பார்வையிட்டார்

இதேபோல் பல குழந்தைகள் தன்னுடைய நண்பர்களை, ஆசிரியர்களை நீண்ட நாளைக்கு பிறகு பார்க்கும் ஆர்வத்துடன், நன்றாக படித்து நல்ல நிலைக்கு வரமுடியும் என்ற நம்பிக்கையுடன் பள்ளிக்கு சென்றதை காண முடிந்தது.

English summary
nearly seven months, thousands of students on Monday turned up at their schools that re-opened across the Kashmir Valley
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X