For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சேது சமுத்திர திட்டத்திற்கு எதிராக தமிழக அரசு மனு தாக்கல்!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: சேது சமுத்திர திட்டத்தை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில்,சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்துவது உகந்ததல்ல என்ற பச்சோரி குழுவின் அறிக்கையை தமிழக அரசு ஏற்பதாகவும், பச்சோரி குழுவின் அறிக்கையை, மத்திய அரசும் ஏற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ராமர் பாலத்தை புராதன சின்னமாக அறிவிக்கலாம். எதிர்காலத்தில் ராமர் பாலத்திற்கு சேதம் ஏற்படுத்தும் வகையில், எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது என மத்திய அரசுக்கு வலியுறுத்த வேண்டும்.

சேது சமுத்திர திட்டத்தினால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும் எனக்கூறுவது உண்மையில்லை. இந்த திட்டம் வந்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் தமிழக அரசு அதில் கூறியுள்ளது.

Scrap unviable Sethu project: T.N.

இந்த மனு, மூன்று வாரங்கள் கழித்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.

அரசு வழக்கறிஞர் விலகல்

இதனிடையே இந்த வழக்கில் மத்திய அரசு வழக்கறிஞராக ஆஜராகி வாதாடிய, ராஜீவ் தவன் திடீரென விலகியுள்ளார். இதனையடுத்து, மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஃபரத் குஹட் புதிய வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ளார்.

English summary
The Tamil Nadu government has reiterated the Supreme Court should direct the Centre not to implement the Sethusamudram project, given that the Gulf of Mannar and surrounding areas are extremely eco-fragile, and the economic values of the project are questionable.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X