For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கருவின் பாலினத்தை அறியும் முறைகள்.. 36 மணி நேரத்தில் விளம்பரங்களை நீக்க கூகுளுக்கு உத்தரவு

கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிவது தொடர்பான விளம்பரங்களை 36 மணி நேரங்களுக்குள் நீக்க வேண்டும் என சர்ச் எஞ்சின் இணையதளங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிவது தொடர்பான விளம்பரங்களை 36 மணி நேரங்களுக்குள் நீக்க வேண்டும் என கூகுள், யாஹூ, மைக்ரோசாப்ட் போன்ற சர்ச் எஞ்சின் இணையதளங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இணையத்தில் தேடினால் கிடைக்காத விசயங்களே இல்லை என்ற அளவிற்கு தொழில்நுப்டம் வளர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக பல்வேறு வசதிகள் கூகுள், யாஹூ, மைக்ரோசாப்ட் போன்ற தளங்களில் கிடைக்கின்றன.

Search engines must remove information on sex determination test within 36 hours:SC

மருத்துவமனைகளில் இது போல் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து அறிவிப்பது சட்டப்படி குற்றம் என்பதால், பலர் இணையத்தை பயன்படுத்தி இதனை தெரிந்து கொள்கின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக பொதுநல வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது. அதனை விசாரித்த உச்சநீதிமன்இறம் இந்த தகவல்களை நீக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட இணையதளங்களுக்கு உத்தரவிட்டது. இதுதொடர்பாக புகார் தரப்பட்ட 36 மணி நேரத்திற்குள் இவற்றை நீக்க வேண்டும் என்றும் அது உத்தரவிட்டுள்ளது.

இதுபோன்ற தகவல்களை யாரும் பார்க்க முடியாத அளவுக்கு தனது இணை யதள தேடுதல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

மேலும், இதுபோன்ற தகவல்களை மக்கள் தேடும்போது தானாகவே அதை பிளாக் செய்யும் வசதியையும் சம்பந்தப்பட்ட சர்ச் எஞ்ஜின்கள் ஏற்படுத்துமாறும் அது அறிவுறுத்தியுள்ளது.

English summary
The Supreme Court today directed all online search engines to remove illegal advertisements, information on sex determination tests within 36 hours of receiving a complaint. The SC observed that search engines such as Google, Yahoo and Microsoft must remove such content within 36 hours of receiving a complaint.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X