For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராம் ரஹீம் சிங்கின் சிர்சா தலைமை அலுவலகத்தில் அதிரடி சோதனை... ராணுவம் குவிப்பு!

ராம் ரஹீம் சிங்கின் சிர்சா தலைமை அலுவலகத்தில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதனால் அங்கு ராணுவம் மற்றும் துணை ராணுவத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

By Suganthi
Google Oneindia Tamil News

சண்டிகர்: பலாத்கார வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சாமியார் ராம் ரஹீம் சிங்கின் தேரா சச்சா, சிர்சா தலைமை அலுவலகத்தில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

பாலியல் பலாத்கார வழக்கில் 20 ஆண்டுகள் தண்டனை பெற்ற சாமியார் ராம் ரஹீம் சிங், தற்போது சிறையில் உள்ளார். இவர் சிறைக்கு செல்லும் போதே இவருடைய சொத்துக்கள் முடக்கப்பட்டன.

 Search Operation Going on in Dera sacha sauda head quarter

இந்நிலையில், ஹரியானாவின் சிர்சாவில் உள்ள தேரா சச்சா அமைப்பின் தலைமை அலுவலகத்தை முற்றிலுமாக சுற்றி வளைத்து போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனையின் போது ஊடகங்களும் பத்திரிகைகளும் அங்கு செல்லக் கூடாது என்பதற்காக, தேரா சச்சா தலைமை அலுவலகத்திலிருந்து 7 கி.மீ தூரத்தில் தான் ஊடகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல், இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. ஆசிரமத்துக்குள் தேடுதல் வேட்டையில் ராணுவம், துணை ராணுவத்தினர் ஆயிரக்கணக்கானவர்கள் ஈடுபடுத்தப்பட்டிருப்பதால் இவர்கள் அனைவருக்கும் பொட்டல சாப்பாட்டுக்கும் அங்கேயே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேரா சச்சா அமைப்பு 600 ஏக்கரில் பரந்து விரிந்து உள்ளது. ராம் ரஹீம் சிங்கை எதிர்த்துப் பேசியவர்கள் மற்றும் செயல்பட்டவர்கள் பிணமாக்கப்பட்டு அங்கேயே புதைக்கப்பட்டுள்ளனர் என்று அந்த அமைப்பிலிருந்து வெளியேறி வந்தவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

உடல்களை புதைத்து அதன் மேல் மரத்தை நட்டு வைப்பதை அங்கு வழக்கமாகக் கொண்டுள்ளனர் எனக் கூறப்படுகிறது. இந்த சோதனையின் மூலம் இதுகுறித்த உண்மை தகவல்கள் வெளிவரலாம்.

English summary
Search Operation Going on in Dera sacha sauda head quarter at Sirsa, Chandigarh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X