For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திய விமானப் படை விமானத்தில் பயணித்த 13 பேரின் கதி என்ன? தொடரும் தேடுதல் நடவடிக்கை

Google Oneindia Tamil News

குவஹாத்தி: அஸ்ஸாமில் விழுந்து நொறுங்கிய இந்திய விமானப் படையின் ஏ.என். 32 ரக விமானத்தில் பயணித்த 13 பேரின் கதி என்ன என்பது குறித்து தொடர்ந்து தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அஸ்ஸாம் மாநிலம் ஜோர்ஹட் விமானப் படை தளத்தில் இருந்து நேற்று பகல் ஏ.என். 32 ரக விமானம் அருணாச்சல பிரதேசத்தில் மெஞ்ச்சுக்கா பள்ளத்தாக்கு நோக்கி புறப்பட்டுச் சென்றது. ஆனால் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான அதன் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.

Search Operations continue to locate AN-32 aircraft

இதையடுத்து விமானத்தை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. அப்போது விமானம் மலைப்பகுதியில் நொறுங்கி விழுந்திருக்கலாம் என கூறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அந்த விமானத்தில் பயணம் செய்த 13 பேரின் நிலைமை என்ன என்பது குறித்து தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இதுவரை அவர்களைப் பற்றிய எந்த ஒரு தகவலும் இல்லை என்கின்றன விமானப் படை வட்டாரங்கள்.

மாயமான விமானத்தை தேடும் பணிகளில் எம்.ஐ.-17 ரக ஹெலிகாப்டர், சி-130 ஜே, ஏ.என்.32 ரக விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தரை வழியாகவும் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேடுதல் நடவடிக்கைகளை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கேட்டு வருகிறார்.

ஏ.என்.32 ரக போர் விமானம் ரஷ்யவின் தயாரிப்பாகவும். விமானப் படை வீரர்களை மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்வதற்கு இந்த விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த 2016-ம் ஆண்டு சென்ன தாம்பரம் விமானப் படை தளத்தில் இருந்து இதே ரக விமானம் 29 பேரும் அந்தமான் தீவுகளுக்கு சென்று மாயமானது.

அதற்கு முன்னர் 2009-ம் ஆண்டு அருணாசலப் பிரதேசத்தில் இதே ஏ.என்.32 ரக விமானம் மலை சிகரம் ஒன்றில் மோதில் வெடித்து சிதறியதில் 13 பேர் உயிரிழந்தனர். கடந்த 10 ஆண்டுகளில் இந்த ரக விமானம் 3-வது முறையாக விபத்துக்குள்ளாகி இருக்கிறது.

English summary
Indian Air Force’s missing AN-32 aircraft with 13 people on board is still not located. C-130J and ground patrols of the Army are still carrying out search operations.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X