For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சத்தீஸ்கர்: பலத்த பாதுகாப்புக்கு இடையே 72 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவக்கம்

By Siva
Google Oneindia Tamil News

Recommended Video

    சட்டிஸ்கர் இறுதிக்கட்ட சட்டமன்ற தேர்தல்-வீடியோ

    ரைபூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை துவங்கி நடந்து வருகிறது.

    சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தல் இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது. முதல்கட்டமாக நக்சல்கள் ஆதிக்கம் உள்ள 8 மாவட்டங்கள் அடங்கிய 18 தொகுதிகளுக்கு கடந்த 12ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

    Second phase of Chattisgarh polling underway amid tight security

    இதையடுத்து மீதமுள்ள 72 தொகுதிகளுக்கான இரண்டாம் மற்றும் இறுதிகட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை துவங்கி நடந்து வருகிறது. இந்த வாக்குப்பதிவை முன்னிட்டு மாநிலம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், ஆட்சியை கைப்பற்றியே ஆக வேண்டும் என்று காங்கிரஸும் முனைப்போடு உள்ளது. சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வரான அஜித் ஜோகி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.

    இந்த தேர்தலில் ஜோகி அவரின் மனைவி ரேணு, மருமகள் ரிச்சா ஆகியோர் போட்டியிட்டுள்ளனர். தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் டிசம்பர் மாதம் 11ம் தேதி எண்ணப்படும்.

    English summary
    Second and final phase of Chattisgarsh assemblt election is underway amid tight security.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X