For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீக்கப்பட்டது 377 தண்டனை சட்டம்... வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு.. ஏன் தெரியுமா?

இந்திய தண்டனை சட்ட பிரிவு 377 நீக்கப்பட்டதன் மூலம் இந்தியாவில் ஓரினசேர்க்கை அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    நீக்கப்பட்டது 377 தண்டனை சட்டம்...வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு- வீடியோ

    டெல்லி: இந்திய தண்டனை சட்ட பிரிவு 377 நீக்கப்பட்டதன் மூலம் இந்தியாவில் ஓரினசேர்க்கை அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் அக்காளின் பல ஆண்டுகால போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது.

    பாலியல் சிறுபான்மையினருக்கு எதிரான இந்திய தண்டனை சட்ட பிரிவு 377ஐ நீக்கி உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கை இந்திய அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.

    தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இந்த தீர்ப்பை அளித்துள்ளது. இதில் ஐந்து நீதிபதிகளும் ஒரு மனதாக தீர்ப்பு வழங்கினார்கள்.

    அமர்வில் இருந்த ஐந்து நீதிபதிகளும் ஒரே தீர்ப்பு வழங்கினார்கள். மேலும் சர்ச்சைக்கு உரிய 377 சட்ட பிரிவை நீக்கினார்கள். இதனால் இந்தியாவில் சட்டப்பூர்வமாக்கப்பட்டது ஓரினச்சேர்க்கை.

    ஏன் இந்த சட்டம்

    ஏன் இந்த சட்டம்

    இந்த சட்டத்தை கொண்டு வந்து பிரிட்டிஸ்கார்கள் முக்கிய ஒரு விஷயத்தை குறிக்கோளாக கொண்டே செயல்பட்டார்கள். கிருஸ்துவ முறைப்படி, ஓரினசேர்க்கை முழுக்க முழுக்க தவறானது. இதனால் அப்போது அவர்களின் காலனி ஆதிக்கத்தில் இருந்து எல்லா நாடுகளிலும் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. இது கடவுளுக்கு எதிரானதாக பார்க்கப்பட்டது.

    என்ன நடக்கிறது

    என்ன நடக்கிறது

    ஆனால் இது எல்ஜிபிடி (LGBT)எனப்படும் லெஸ்பியன் (பெண்பால் ஈர்ப்பு கொள்ளும் பெண்கள்), கே (ஆண்பால் ஈர்ப்பு கொள்ளும் ஆண்கள்), பை செக்ஸுவல் (இரண்டு பால் மீது ஈர்ப்பு கொண்டவர்கள்), டிரான்ஸ்ஜெண்டர் (திருநங்கைகள், திருநம்பிகள்) ஆகிய பாலியல் சிறுபான்மையினருக்கு எதிராக இந்த சட்டம் பல ஆண்டுகளாக ஏவப்படுகிறது. சாலையில் செல்லும் திருநங்கை ஒருவர் கைது செய்யப்படுவது கூட இந்த சட்ட பிரிவின் கீழ்தான். பல அடுக்குமுறைகள் இந்த சட்ட பிரிவால் நிகழ்த்தப்பட்டுள்ளது.

    மாற்றம் என்ன நடக்கும்

    மாற்றம் என்ன நடக்கும்

    தற்போது இந்த சட்ட பிரிவு நீக்கப்பட்டுள்ளது. இதனால் தேவையில்லாமல் மக்கள் கைது செய்யப்படுவது தடுக்கப்படும். உலக அளவில் இந்தியாவின் பெயர் நல்ல நிலையை அடையும். ஆண்களும், பெண்களும்., திருநங்கைகளும், திருநம்பிகளும் அவர்கள் விருப்பம் போல் கல்யாணம் செய்ய முடியும், வாழ முடியும். இதனால் பல வருட அடுக்குமுறை ஒழியும்.

    எத்தனை வருடம்

    எத்தனை வருடம்

    இது இப்போது மாடர்ன் உலகத்தால் வந்த கோரிக்கை என்று யாரும் நினைக்க கூடாது. 90களிலேயே இதற்காக கோரிக்கை வைக்கப்பட்டு இருக்கிறது. 30 வருடமாக இதுகுறித்து பலர் பேசியும், போராடியும், எழுதியும் இருக்கிறார்கள். தற்போது 377 சட்டம் நீக்கப்பட்டதன் மூலம், இந்த் போராட்டம் வெற்றி அடைந்துள்ளது.

    English summary
    Section 377: Supreme Court decriminalized Homosexual relationships.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X