For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எது இயற்கை?.. ஓரினசேர்க்கையாளர்களிடம் நாம் மன்னிப்பு கேட்க வேண்டும்.. விளாசிய நீதிபதிகள்

இந்திய தண்டனை சட்ட பிரிவு 377 நீக்கப்பட்டதன் மூலம் இந்தியாவில் ஓரினசேர்க்கை அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    ஓரினசேர்க்கையாளர்களிடம் நாம் மன்னிப்பு கேட்க வேண்டும் - நீதிபதிகள்- வீடியோ

    டெல்லி: இயற்கை எது என்பதை நாம் தீர்மானிக்க கூடாது, ஓரின சேர்க்கையாளர்களுக்கு எதிராக நடந்து வந்த நாம் அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நீதிபதிகள் தண்டனை சட்ட பிரிவு 377 ஐ நீக்கும் வழக்கில் தெரிவித்து உள்ளனர்.

    பாலியல் சிறுபான்மையினருக்கு எதிரான இந்திய தண்டனை சட்ட பிரிவு 377ஐ நீக்கி உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இந்த தீர்ப்பை அளித்துள்ளது.

    இதில் ஐந்து நீதிபதிகளும் ஒரு மனதாக தீர்ப்பு வழங்கினார்கள். அமர்வில் இருந்த ஐந்து நீதிபதிகளும் ஒரே தீர்ப்பு வழங்கினார்கள். மேலும் சர்ச்சைக்கு உரிய 377 சட்ட பிரிவை நீக்கினார்கள். இதனால் இந்தியாவில் சட்டப்பூர்வமாக்கப்பட்டது ஓரினச்சேர்க்கை.

    தொடக்கம்

    தொடக்கம்

    நான் என்னவாக இருக்கிறேனோ அதுவே நான், என்னை இப்படியே ஏற்றுக்கொள் என்று ஜெர்மன் பொன்மொழியை கூறிவிட்டு தலைமை நீதிபதி தீர்ப்பு வாசித்தார். இயற்கைக்கு முரணான பாலியல் உறவு தண்டனைக்குரிய குற்றமல்ல.சமுதாயம் மாறினால்தான் முன்னேற்றம் அடையும். மாற்றங்களை சமுதாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும். மற்ற குடிமகன்களுக்கு இருக்கும் உரிமை தன்பாலின உறவு கொள்பவர்களுக்கும் உண்டு.

    மன்னிப்பு கேட்க வேண்டும்

    மன்னிப்பு கேட்க வேண்டும்

    ஓரினச்சேர்க்கையை குற்றம் என்பது பகுத்தறிவற்றது மற்றும் அவமதிப்பானது. அவர்களிடம் நாம் மன்னிப்பு கேட்க வேண்டும். அந்த அளவிற்கு நாம் இவ்வளவு நாட்கள் அவர்களை கஷ்டப்படுத்தி துன்புறுத்தி இருக்கிறோம். ஓரினச்சேர்க்கைக்கு எதிரான சட்டம் தீர்க்கப்படுவது முதல் படிதான்.

    இயற்கை என்ன?

    இயற்கை என்ன?

    இயற்கையின் ஒழுங்கு என்ன? அனுமதிக்கப்படுவது , அனுமதிக்க கூடாதது என்பது அரசும் சட்டமும் தீர்மானிக்க முடியாது. இந்த சட்டம் மக்களைத் துன்புறுத்துகிறது. மெளனமாக வாழ பாலியல் சிறுபான்மையினரை அடிமைப்படுத்த இந்த சட்டம் வழிவகை செய்திருந்தது. அதை நீக்குகிறோம்.

    நடக்காது

    நடக்காது

    நம்முடைய பழைய நாகரிகம் மிருகத்தனமானது. கடந்த கால வரலாறு நிகழ்காலத்தை கட்டுப்படுத்த முடியாது. கட்டுப்படுத்த கூடாது. ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு கண்ணியமாக வாழ ஒரு அடிப்படை உரிமை உள்ளது. அவர்கள் மனிதர்கள் என கருதப்பட வேண்டும் மற்றும் சகோதரத்துவம் உருவாக வேண்டும். அவர்கள் தங்கள் தேர்வுகளை செய்ய அனுமதிக்கப்பட வேண்டும்.

    தகுதி

    தகுதி

    அவர்கள் கண்ணியம் மற்றும் வருத்தம் இல்லாமல் வாழ அனுமதிக்கப்பட வேண்டும். இது அவர்களின் கௌரவம், சமத்துவம், சுதந்திரம் ஆகியவற்றுக்கான பயணமாகும். அவர்கள் முழு அளவிலான அரசியலமைப்பு உரிமைகளைக் கொண்டுள்ளனர். பாலியல் தேர்வு, பங்குதாரர் தேர்வு ஒரு அடிப்படை உரிமை.அவர்கள் சமமான குடியுரிமை மற்றும் சமமான பாதுகாப்பு சட்டங்களை பெற தகுதி உள்ளவர்கள். அவரவர் உணர்வு மறுக்கப்படுவது இறப்புக்கு சமம் என்ற நீதிபதிகளின் இந்த தீர்ப்பு உலகம் முழுக்க வரவேற்பை பெற்றுள்ளது.

    English summary
    Section 377: We owe an apology to LGBTQ community says Supreme Court judges.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X