For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவில் மதச்சார்பின்மையும் முன்னேற்றமும் ஒருங்கிணைந்து செல்கிறது: சோனியாகாந்தி

Google Oneindia Tamil News

Secularism and all-round development go together: Sonia Gandhi
பச்பதரா: மதச்சார்பின்மையும், முன்னேற்றமும் ஒருங்கிணைந்தே செல்வதாக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கருத்துத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ராஜஸ்தான் மாநிலம் பச்பதரா என்னுமிடத்தில், ரூ. 37,230 கோடி முதலீட்டிலான சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல் வளாகத்திற்காக அடிக்கல் இன்று நாட்டினார்.

அப்போது விழாவில் பேசிய சோனியா உத்தரப்பிரதேச முசாபர்நகர் மாவட்டத்தில் நடந்த கலவரத்தில் 50 பேர் வரை கொல்லப்பட்டதையும், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அகதிகளாக்கப்பட்டதையும் நினைவு கூர்ந்தார்.

மேலும், அதுகுறித்து விழாவில் சோனியாகாந்தி பேசியதாவது, ‘சமூகத்தில் உள்ள ஒவ்வொரு பிரிவினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இங்கு இந்தியாவில் மதச்சார்பற்ற கலாச்சாரம் இருக்கிறது. இதுவே நாட்டின் நிர்வாகத்திற்கு அடிப்படை.

உங்கள் சொந்த அரசாங்கம் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை உறுதிபடுத்துகிறபோது அனைத்து வழிகளிலும் முன்னேற்றம் ஏற்படுகிறது. பிறகு அங்கு வளம் கொழிக்கிறது.

பெண்கள் மற்றும் பழங்குடியினர் ஏழைகளின் வளர்ச்சி மற்றும் வலிமைக்காவும் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது' எனத் தெரிவித்தார்.

English summary
With the recent communal violence weighing on her mind, Sonia Gandhi on Sunday said the country's secular ethos require that all communities move forward shoulder to-shoulder on the path of development and a government needs to maintain peace and harmony to ensure this.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X