சபரிமலையில் 10,000 போலீசார் பாதுகாப்பு.. பம்பைக்கு தனியார் வாகனங்களுக்கு அனுமதியில்லை
சபரிமலை: சபரிமலையில் 10,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பம்பைக்கு தனியார் வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில், 10,000 போலீஸ்காரர்கள் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர். மூன்று பகுதிகளில் எஸ்.பி.க்கள் தலைமையிலான அதிகாரிகள் வெள்ளிக்கிழமை முதல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் சிறப்பு போலீஸ் மற்றும் போக்குவரத்து போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த முறை பம்பைக்குள் எந்த தனியார் வாகனங்களும் அனுமதிக்கப்படாது. நிலக்கலில் இருந்து பம்பைக்கு கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்துகள் மட்டுமே அனுமதிக்கப்படும். பக்தர்கள், வாகனங்களுக்கு நிலக்கலில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. கே.எஸ்.ஆர்.டி.சி பஸ் வசதி இன்று காலை 11 மணி முதல் தொடங்கும்.
தேவசம் வாரிய அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், சபரிமலை என்பது ஆர்வலர்கள் தங்கள் செயல்பாட்டைக் காண்பிப்பதற்கான இடமல்ல என்றும், சன்னதிக்குச் செல்ல விரும்பும் அத்தகைய பெண்களை அரசு ஊக்குவிக்காது என்றும் கூறியுள்ளார். நீதிமன்ற உத்தரவின் பேரில் அதற்கான ஆவணங்களை கொண்டு வரும் இளம் பெண்களாக இருந்தால் மட்டுமே கோவிலுக்குள் செல்ல அனுமதி வழங்கப்படும் என்றார்.
4 மாநகராட்சிகள் வேண்டும்... அதிமுகவிடம் கறார் காட்டும் பாஜக
அதேநேரம், அமைதியான சூழ்நிலை நிலவுவதால், கடந்த ஆண்டு போன்று தடை உத்தரவுகளை அறிவிக்க வேண்டிய அவசியமில்லை என்று பதனம்திட்டா மாவட்ட ஆட்சியர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி, உச்சநீதிமன்றத்தில் மாநில அரசின் சார்பில் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தை திரும்பப் பெறக் கோரியுள்ளது. அந்த பிரமாண பத்திரத்தில் அனைத்து வயது பெண்களையும் சபரிமலை கோவிலுக்குள் அனுமதிக்க மாநில அரசு சம்மதம் தெரிவித்திருந்தது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!