For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கடவுளே.. இதற்கு பெயர் பாடத்திட்டமா?.. டிவிட்டரில் கொதித்தெழுந்த சேவாக்.. ஏன்?

சிபிஎஸ்இ பாடத்தில் குடும்ப அமைப்பு குறித்த விளக்கம் ஒன்றை பார்த்துவிட்டு, கிரிக்கெட் வீரர் சேவாக் தன்னுடைய கடுமையான விமர்சனத்தை வைத்து இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

டெல்லி: சிபிஎஸ்இ பாடத்தில் குடும்ப அமைப்பு குறித்த விளக்கம் ஒன்றை பார்த்துவிட்டு, கிரிக்கெட் வீரர் சேவாக் தன்னுடைய கடுமையான விமர்சனத்தை வைத்து இருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் மிகவும் தீவிரமாக இயங்கி வருகிறார் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக். களத்தில் எப்படி அதிரடியோ அப்படியே டிவிட்டரிலும் அவர் அதிரடியாக பேசி வருகிறார்.

Sehwag Condemns a book syllabus which portrays joint-family badly

கிரிக்கெட் மட்டுமில்லாமல் அரசியல், சமுதாயம் குறித்து டிவிட் செய்து வருகிறார். இந்தநிலையில் சிபிஎஸ்இ பாடத்தில் குடும்ப அமைப்பு குறித்த விளக்கம் ஒன்றை பார்த்துவிட்டு சேவாக் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

பாடம் ஒன்றில் உள்ள விளக்கத்தில், கூட்டு குடும்பம் என்பது முதியவர்கள் முதல் குழந்தைகள் வரை எல்லோரும் ஒன்றாக இருப்பது. கூட்டு குடும்பத்தில் நிம்மதியாக இருக்க முடியாது என்றுள்ளது. இதைத்தான் அவர் ஷேர் செய்து கண்டனம் செய்துள்ளார்.

அதில் ''இதுபோல நிறைய மோசமான விஷயங்கள் பள்ளி புத்தகத்தில் உள்ளது. இதை படித்து பார்த்து வெளியிடும் அதிகாரிகள் சரியான முன் தயாரிப்புகளில் ஈடுபடுவதே இல்லை'' என்று கூறியுள்ளார். அவரது கருத்துக்கு பலர் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள்.

English summary
Sehwag Condemns a book syllabus which portrays the joint-family badly. He tweeted, A lot of such crap in school textbooks. Clearly the authorities deciding and reviewing content not doing their homework
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X