For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடி அரசின் முத்ரா திட்டத்தால் பலன் உண்டா?

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: மோடி அரசின் கனவு திட்டத்தில் ஒன்றான முத்ரா எனப்படும் கடனுதவி வழங்கும் திட்டம் எப்படி செயல்படுகிறது என்பது குறித்து ஒரு ஆய்வு நடந்துள்ளது.

இந்த திட்டம் எப்படி உள்ளது என்பது குறித்து ரன்னித்தி கன்சல்டிங் மற்றும் ஆய்வு அமைப்பின் நிதின் மேதா மற்றும் பிரணாவ் குப்தா ஆகியோர் கூறுவது இதுதான்:

Self Employment and Job Creation: Tracking the Progress of Mudra Yojana under Modi

முத்ரா திட்டப்படி, மைக்ரோ நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதில் ஈடுபட்டுள்ள மைக்ரோ கடன் நிறுவனங்கள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு அரசாங்கம் நிதியளித்து வருகிறது.

மூன்று வகையில் இந்த திட்டம் செயல்படுகிறது. ரூ.50 ஆயிரம் வரை வழங்கும் கடன் திட்டம், ஷிசு என அழைக்கப்படுகிறது. ரூ.50000 முதல் ரூ.5,00000 வரையிலான கடன் உதவி தருண் என அழைக்கப்படுகிறது. ரூ.5 லட்சத்திற்கு மேற்பட்ட கடனுதவி மதூர் என அழைக்கப்படுகிறது.

காய்கறி விற்பவர், பழக்கடை வைத்திருப்போர், சிறு கடை வைத்திருப்போர் என அனைத்து வகை கடன் செல்லும் இடங்களும் இந்த வகை பிரிவில்தான் இடம் பெற்றுள்ளது. இவர்களுக்கு வேறு கடன் நிறுவனங்கள் கடன் வழங்க முன்வராத நிலையில் முத்ரா திட்டத்தின்கீழ் கடன் கிடைக்கிறது.

2016-17ல் ரூ.4 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய நிதியாண்டில் இது ரூ.3.5 கோடி என்ற அளவில் இருந்தது. இதில் மூன்றில் ஒரு பகுதி கடன் அதாவது, 36 சதவீதம் நிதி உதவி, புதிய தொழில் தொடங்குவோரால் பெறப்படுகிறது.

நான்கில் ஒரு பகுதி கடன் தொகை பெண்களுக்கு சென்றடைவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. முத்ரா திட்டத்தில் பலன் பெற்றவர்களில் 35 சதவீதம் பேர், பிற பிற்படுத்தப்பட்ட ஜாதிகளை சேர்ந்தவர்கள். 20 சதவீதம் பேர் தாழ்த்தப்பட்டோர், 5 சதவீதம் பேர் பழங்குடியினர்.

சிறு தொழில் அமைப்புகளை வேலை வாய்ப்பை உருவாக்கும் மையங்களாக மாற்றுவதே முத்ரா திட்டத்தின் நோக்கம். இப்போதைய தேவை, அனைத்து வகை மேற்பார்வையுடன் இத்திட்டம் செயல்படுவதை உறுதி செய்வதுதான். முத்ரா மட்டுமே போதாது. இத்தோடு மேலும் பல வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டங்களும் அவசியம்.

English summary
Under MUDRA Yojana, the government provides refinancing to micro credit institutions and non-banking financial corporations engaged in lending to micro enterprises.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X