For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

துட்டுக்கு ஓட்டு.. இது ஓல்டு நைனா.. ஓட்டுப் போட்ட பிறகு காசு.. இதுதான் லேட்டஸ்ட்!

மிசோரத்தில் வாக்கு சதவீதம் அதிகரிக்க செல்பி போட்டி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

அய்சால்: "ஓட்டு போடறதுக்கு காசு" இது பழசு! ஆனா ஓட்டு போட்ட பிறகு காசு தர்றாங்களாம்.. இது புதுசு! ஆமாம்.. "ஓட்டு போடுங்க.. மை வெச்ச விரலை ஒரு செல்பி எடுத்து அனுப்புங்க.. ரூ.7000 பரிசு அள்ளுங்க" என்று தேர்தல் ஆணையம் செம விளம்பரம் ஒன்றினை அறிவித்துள்ளது.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று மிசோரம்! இந்த மாநிலத்திலேயே ஒரே ஒரு பாராளுமன்ற தொகுதிதான் உள்ளது. இது ஒரு தனித்தொகுதி ஆகும்.

Selfie contest on voting day in Mozoram first time

கடைசியில்.. பாஜகவின் தேர்தல் அறிக்கையிலும் கூட அத்வானிக்கு இடமில்லாமல் போச்சே!கடைசியில்.. பாஜகவின் தேர்தல் அறிக்கையிலும் கூட அத்வானிக்கு இடமில்லாமல் போச்சே!

மொத்தம் 7 லட்சத்து 23 ஆயிரத்து 663 வாக்காளர்கள் உள்ளனர். இந்த தொகுதியில் வருகிற 11-ம் தேதி அன்று தேர்தல் நடக்க போகிறது.

ஆனால் போன முறை இந்த இடத்தில் தேர்தல் நடந்தபோது யாருமே சரியாக ஓட்டு போடவில்லை. அதனால் வர போகிற தேர்தலில் எப்படியாவது இந்த வாக்கு சதவீதத்தை அதிகரிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அதற்காக புது ஐடியாவை கையில் எடுத்துள்ளது.

Selfie contest on voting day in Mozoram first time

அதன்படி, வாக்காளர்கள் ஓட்டுபோட்டு முடித்ததும் ஆள்காட்டி விரலில் வைக்கப்பட்டுள்ள 'மை'யை செல்பி எடுத்து அனுப்ப வேண்டுமாம். அப்படி அனுப்பி வைத்தால் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

வாக்களித்ததை உறுதி செய்ததை காட்டும் சிறந்த செல்பிக்கு முதல் பரிசாக ரூ.7ஆயிரம், 2-வது சிறந்த செல்பிக்கு ரூ.3 ஆயிரம், 3-வது சிறந்த செல்பிக்கு ரூ.2 ஆயிரம் பரிசு என தெரிவித்துள்ளது. எப்படியோ வாக்கு சதவீதம் இந்த முறை கூட போவது உறுதி!

English summary
To encourage first time voters, the Mizoram Election Department will organise a selfie contest and announces the Prize
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X