For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமரீந்தர்சிங் ராஜினாமாவை தொடர்ந்து பஞ்சாப் புதிய முதல்வராகிறாரா மூத்த காங். தலைவர் அம்பிகா சோனி?

Google Oneindia Tamil News

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் புதிய முதல்வர் யார் என்பது இன்று அறிவிக்கப்பட உள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அம்பிகா சோனி, பஞ்சாப் புதிய முதல்வராக அறிவிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

Recommended Video

    2024 ஆம் ஆண்டு வரை போராடவும் நாங்கள் தயார்.. தமிழகத்து பஞ்சாப் விவசாயி கோல்டன் | Oneindia Tamil

    பஞ்சாப் மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் படுதீவிரமாக இறங்கி உள்ளன.

    ஆனால் பஞ்சாப்பில் ஆளும் காங்கிரஸ் கட்சி உட்கட்சி பூசலில் சிக்கி திணறுகிறது. 50க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் முதல்வர் பதவியை அமரீந்தர்சிங் ராஜினாமா செய்தார்.

    வருத்தப்படாத வாலிபர் சங்கம் தெரியும்! இது என்ன புதுசா இருக்கே! வெறும் அரை மணி நேரம் எப்படி? வருத்தப்படாத வாலிபர் சங்கம் தெரியும்! இது என்ன புதுசா இருக்கே! வெறும் அரை மணி நேரம் எப்படி?

    சித்துவுக்கு எதிர்ப்பு

    சித்துவுக்கு எதிர்ப்பு

    அத்துடன் பஞ்சாப் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முதல்வராக மாநில தலைவர் நவ்ஜோத்சிங் சித்துவை அறிவிக்கவும் அமரீந்தர்சிங் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமரீந்தர்சிங் கூறுகையில், பாகிஸ்தான் பிரதமர், ராணுவ தளபதியுடன் நெருக்கமான தொடர்பு வைத்திருப்பவர் நவ்ஜோத்சிங் சித்து. இது தேசபாதுகாப்புக்கு ஆபத்தானது. ஆகையால் சித்துவை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது. அவரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க எதிர்ப்பு தெரிவிக்கிறேன் என்றார்.

    ராகுல் ஆலோசனை

    ராகுல் ஆலோசனை

    மேலும் நேற்று சண்டிகரில் பஞ்சாப் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புதிய முதல்வரை முடிவு செய்யும் அதிகாரம், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து டெல்லியில் நேற்று இரவு பஞ்சாப் விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார். ராகுல் காந்தி நடத்திய ஆலோசனை கூட்டத்தில் புதிய முதல்வராக யாரை தேர்வு செய்யலாம் என விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் அம்பிகாசோனி, பாஜ்வா, பிரம் மொகிந்திரா, விஜய் இந்தர் சிங்லா, குல்ஜித்சிங், பிரதாப் சிங் பாஜ்வா ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டிருக்கின்றன. இந்த கூட்டத்தில் அம்பிகா சோனியும் பங்கேற்றிருந்தார்.

    முதல்வராகிறாரா அம்பிகா சோனி?

    முதல்வராகிறாரா அம்பிகா சோனி?

    தற்போதைய நிலையில் மூத்த காங்கிரஸ் தலைவர் அம்பிகா சோனிக்கு முதல்வராக அதிக வாய்ப்புகள் உள்ளன. அவருக்கு அடுத்ததாக பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் சுனில் ஜாகர், தற்போதைய தலைவர் சித்து, சுக்ஜிந்தர் சிங் ரந்த்வா ஆகியோர் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படலாம்.

    இந்திரா குடும்பமும் அம்பிகா சோனியும்

    இந்திரா குடும்பமும் அம்பிகா சோனியும்

    நேரு குடும்பத்துடன் மிக நெருக்கமானவர் அம்பிகா சோனி. 1969-ம் ஆண்டு இந்திரா காந்தியால் அரசியலுக்கு அழைத்துவரப்பட்டவர் அம்பிகா சோனி. மறைந்த முன்னாள் பிரதமர் நேருவுக்கு மிக நெருக்கமானவர் அம்பிகா சோனியின் தந்தை. அவர் நாடு பிரிவினையின் போது அமிர்தசரஸ் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்தார். இந்திரா காந்தியின் மகன் சஞ்சய் காந்தியுடன் இணைந்து காங்கிரஸ் கட்சி கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டவர். மேலும் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து பல முறை ராஜ்யசபா எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அம்பிகா சோனி.

    English summary
    Senior Congress leader Ambika Soni is likely to be the next Punjab Chief Minister, sources said.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X