For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விஸ்வ ஹிந்து பரிஷத் மூத்த தலைவர் அசோக் சிங்கால் காலமானார்!!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மூத்த தலைவர் அசோக் சிங்கால் (வயது 89) உடல் நலக் குறைவால் டெல்லியில் இன்று காலமானார்.

இந்துத்துவா அமைப்பான விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மூத்த தலைவராக இருந்து வந்தவர் அசோக் சிங்கால். உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த அசோக் சிங்கால், பெனாரஸ் பல்கலைக் கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றவர்.

Senior VHP leader Ashok Singhal dies

1942ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இணைந்தார். 1980களில் இருந்து விஸ்வ ஹிந்து பரிஷத்தின் இணை பொதுச்செயலர், பொதுச்செயலர், செயல் தலைவராக இருந்து வந்தார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டியாக வேண்டும் என்பதை தீவிரமாக வலியுறுத்தி வந்தார்.

இந்நிலையில் கடந்த வாரம் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட டெல்லி குர்கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்று பிற்பகல் 2.24 மணிக்கு சிகிச்சை பலனின்றி அசோக் சிங்கால் உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., வி.ஹெச்.பி. உள்ளிட்ட அமைப்புகளின் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

English summary
Veteran VHP leader Ashok Singhal passes away at Medanta Hospital in Gurgaon, Delhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X